பக்கம்:கதாநாயகி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடை மழை பொழிந்தது; நின்றது. கணப்பித்தம் கணச்சித்தம் கதைதான்! தாய்க்கு தஞ்சாவூருக்கு எழுதிய தபாலைப் போட்டு விட்டு வத்ததில் அம்பலத்தரசன் வெகுவாகக் குதுகலம் அடைந்தான். தான் அதிகார பூர்வமாகச் செய்யவிருக்கின்ற முதற் கடனுக்கு மூலாதாரமாக இருந்த இந்த இரண்டாவது கடமையைக் காலத்தோடு செய்தது அவனுக்கு மன அமைதியைக் கொடுத்தது. அம்மாவின் சம்மதத்தைத் தானாகவே எடுத்துக் கொண்டது. முகூர்த்தத்துக்கு நாள் பார்க்க வேண்டியது, உடன் தஞ்சாவூருக்குப் பயணப்படுவது, அன்னையின் ஆசீர்வாத்ததின்பின் தானும் ஊர்வசியும் புதுமணத் தம்பதியாக ஆவது, பின்னர் தனிக்குடித்தனம் வைப்பது இப்படியாக அவன் தன் எதிர்காலத்தை ஊர்வசியின் பின்னணியில் உல்லாசமாகப் பின்னிய நிலையுடன் நடந்தவன், வழியில் 'சிங்கிள் காஃபி போட்டுக்கொண்டு மீண்டும் நடைபயின்று, மண்ணடி வீதியில் ஒரு குழாய் ஊதுவத்தியும் இரண்டுமுழம் ரோஜாவும் வாங்கியவனாக அறையை அடைந்தான் அவன். வழியில் தென்பட்ட மினர்வா தியேட்டர் பட விளம்பரத்தைக் கண்டான்; வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு என்ற அந்த ஆட்டத்துக்குக் காலைக் காட்சி பார்ப்பதற்குத் தானும் ஊர்வசியும் புறப்படவேண்டும் என்ற எண்ணத்தின் நெருக்கமர்ன ஆசையையும் நெஞ்சில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/118&oldid=765994" இலிருந்து மீள்விக்கப்பட்டது