பக்கம்:கதாநாயகி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று புள்ளிகளைச் சேர்த்து முக்கோணமாக உருவாக்கிக்கொண்டிருந்தது. அம்பலத்தரசனின் மனச்சாட்சி. பிராட்வே விதியில் அவன் நடை தொடர்ந்தான். விசாலமாக இருந்த அவனது மனவிதியில் எண்ணங்கள் தொடர்ந்தன. நிலவொளியை அழுத்திவிட்டது, மின்னொளி. நல்லவேளை, காற்றைப் பொறுத்த மட்டில், இயற்கைதான் கொடிகட்டிப் பறந்தது. புதிய புதிய கனவுகளும், புதிய புதிய கவலைகளும், அவனுடைய மனச்சான்று அமைத்திருந்த முக்கோணத்தில் உள்வட்டமாகச் சுழன்று. தவித்துக் கொண்டிருந்தன. இரண்டுங்கெட்ட அந்தச் சிக்கலில் திக்கு முக்காடிய அவன், ஒரு கணம் அப்படியே செயலற்று நின்றான். . ೨೩ರ್ಕ மெய்யுணர்வு எய்திய தருணத்தில் வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு' என்ற ஆங்கிலப்படத்தின் சுவரொட்டி விளம்பரம் அவன் திருஷ்டியில் பட்டு விலகியது. 'T657 வாழ்க்கையும் ஒரு சதுரங்க விளையாட்டாகத்தான் ஆகிவிட்டது! விளையாட்டின் வெற்றி - தோல்வி யாருக்குச் சொந்தம்? எனக்கா? என் ஊர்வசிக்கா? இல்லை, விதிக்கா? அன்றித் தெய்வத்துக்கா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/81&oldid=766097" இலிருந்து மீள்விக்கப்பட்டது