பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பைத்தியம் உளறுகிறது’ என்று நினைத்தார்கள். ஆயினும், “சரி, காளை பார்க்கலாம்” என்றார்கள்.

மறுநாள் அந்த மண்டபத்தில் எள் விழக்கூட இடமில்லை. மேடையில் முதலிலே கோமாளி வந்தான். அவன் வங்து நின்றதுமே சபையோர் அவனுக்குக் குதூகல வரவேற்பு அளித்து ஆரவாரம் செய்தனர். அவன் பன்றிபோல் கத்த ஆரம்பித்தான். “ஆஹா! எப்படிக் கத்துகிறான் பன்றி கூட இவனிடம் பிச்சை வாங்க வேண்டும்!” என்றார்கள் சிலர்.

“”அந்தக் குடியானவனுக்குப் பொறாமை அதிகம். இதைவிடத் திறமையாகச் செய்ய முடியுமா?” என்றார்கள் வேறு சிலர்.

கோமாளி கத்தி முடிந்ததும், குடியானவன் மேடைக்கு வந்தான். உடம்பைப் போர்வையால் போர்த்துக்கொண்டு, அவன் மேடையில் வந்து நின்றதும், எல்லோரும் கைகொட்டிக் கேலி செய்தார்கள். ஆனாலும், குடியானவன் கவலைப்படவில்லை. நன்றாகக் கீழே குனிந்து கொண்டான். மறுவிநாடி, ‘ஈக், பீக், ஈக், பீக்’ என்ற குரல் பலமாகக் கேட்டது.

அந்தக் குரலைக் கேட்டதும், சபையோர் ஏளனமாகச் சிரித்தார்கள். “”பன்றி இப்படியா கத்தும்? ஏமாற்றப் பார்க்கிறான்” என்றார்கள்.

“உள்ளே போ, உள்ளே போ” என்று கூச்ச லிட்டார்கள்.

25