உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திறந்தாள். உள்ளே சிறிய ரொட்டி ஒன்று இருந்தது. அதன் மேல், ‘என்னைச் சாப்பிடு’ என்று எழுதப்பட்டிருந்தது.

“இதைத் தின்றால் என்ன ஆகுமோ? கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பழைய உருவத்தை அடைந்தாலும் அடையலாம். அப்போது, மேஜை மேலுள்ள சாவியைச் சுலபமாக எடுத்து விடலாம்… ஒரு வேளை, இதைச் சாப்பிட்டதும், இன்னும் குறுகி விட்டால்…? எறும்பைப் போல் சிறுத்து விட்டாலும் கவலையில்லை. கதவுக்கு அடியிலே புகுந்து, அந்தச் சிறு பாதை வழியாகத் தோட்டத்துக்குப் போய் விடலாம். எப்படியானாலும் சரி; கவலையில்லை” என்று துணிச்சலாக, அந்த ரொட்டியை எடுத்தாள்; வாயில் வைத்துக் கடித்தாள்; ரொட்டி முழுவதையும் சாப்பிட்டு முடித்தாள். பிறகு, ‘நாம் இப்போது எப்படி இருக்கிறோம்?’ என்று குனிந்து, தன்னுடைய காலைப் பார்த்தாள். கால் பாதங்களை அங்கே காணவில்லை! எங்கோ வெகு தூரத்தில் இருப்பதாகத் தெரிந்தது. அவ்வளவு நீளத்திற்கு அவள் கால்கள் வளர்ந்து விட்டன! கால்கள் மட்டும்தானா? கைகள், உடல், தலை எல்லாமே விசுவரூபம் எடுத்து விட்டன!

அப்புறம்?

அப்புறம் என்ன?

அதிசய உலகில் ஆலிஸ் (Alice in Wonderland) என்னும் அந்த அதிசயக் கதை முழுவதையும் சொல்வதென்றால், அதுவே ஒரு தனிப் புத்தகமாகி விடும்! மேலே. சொல்லப் பட்டிருப்பது அக்கதையின் முதல் பகுதியேயாகும். ஆலிஸ் என்னும் சிறுமி தனது

10