உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உடனே காரியதரிசி இந்தக் கதையை எழுதிய ஆசிரியரான லூயி கரால் (Lewis Carroll) என்பவருக்கு மகாராணியின் பாராட்டுதலைத் தெரிவித்தார். அத்துடன், அவருடைய அடுத்த புத்தகத்தை மகாராணி ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் அறிவித்தார். லூயி கரால், மகாராணிக்குத் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, “எனது அடுத்த புத்தகம் அச்சில் இருக்கிறது. தயாரானதும், உடனே தங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கிறேன்” என்று எழுதினார்.

மகாராணி ஆவலாக அந்தப் புத்தகத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள், லூயி கராலிடமிருந்து மகாராணிக்கு ஒரு பார்சல் வந்தது. .மகாராணி மேல் உறையை ஆவலோடு பிரித்தார். உள்ளேயிருந்த புத்தகத்தை அவசரம், அவசரமாகப் புரட்டினார். அப்போது அவருடைய முகம் சுருங்கியது. “என்ன இது? கதைப் புத்தகம் கேட்டால், கணிதப் புத்தகம் வந்திருக்கிறதே! இதையா நான் கேட்டேன்? லூயி கரால் எழுதியதா இது?” என்று கேட்டார்.

இல்லை; லூயி கரால் எழுதியதாக அதில் குறிப்பிடப்படவில்லை. சார்லஸ் லட்விட்ஜ் டாஜ்சன் என்பவர் எழுதியதாகவே அப்புத்தகத்தின் முகப்பில் அச்சிடப்பட்டிருந்தது.

அப்படியானால், லூயி கரால் ஏன் அதை அனுப்பி வைத்தார்? ஒருவேளை, தவறுதலாக அனுப்பி விட்டாரோ? இல்லை; வேண்டுமென்றுதான் அனுப்பி வைத்தார். காரணம், அந்தக் கணிதப் புத்தகத்தை

12