உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கதை சொன்னவர் கதை 2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1848-ல் அவர் சட்டமன்றத் தேர்தலில் நின்றார். வெற்றியும் பெற்றார். சட்டமன்ற உறுப்பினராகி மூன்றாண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள், பிரெஞ்சு தேசத்தில், குடியாட்சி மாறி, சர்வாதிகார ஆட்சி வந்து விட்டது. முன்பு இருந்தானே, மாவீரன் நெப்போலியன், அவனுடைய அண்ணன் மகன் ஒருவன் அப்போது இருந்தான். அவன் மூன்றாவது நெப்போலியன் என்று பெயர் வைத்துக் கொண்டு பிரெஞ்சு நாட்டின் சர்வாதிகாரியாகி விட்டான்!

ஹ்யூகோ அவனை எதிர்த்துப் பேசியும், எழுதியும் வந்தார். கடைசியில், பிரெஞ்சு நாட்டை விட்டு, வேறு நாடு போக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு விட்டது. பெல்ஜியத்திற்குச் சென்றார். அங்கு ஒன்றல்ல; இரண்டல்ல; பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். பிரெஞ்சு நாட்டில் மீண்டும் குடியாட்சி ஏற்பட்ட பிறகே திரும்பி வந்தார். ஹ்யூகோ எழுதிய இரு நாவல்கள் இன்று உலகப் புகழ் பெற்று விளங்குகின்றன. அவற்றில் ஒன்று ‘ஏழை படும் பாடு’ என்பதாகும். இது தமிழில் புத்தகமாக வந்திருக்கிறது; திரைப்படமாகவும் வந்தது. ஆனால், உலகப் புகழ் பெற்ற இந்நாவல்களை அவர் எழுதியது வெளிநாட்டில் இருந்த போதுதான்!

ஹ்யூகோவின் எண்பதாவது பிறந்த நாள், பிரெஞ்சு தேசம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நன்னாளில் ஆறு லட்சம் மக்கள் ஒரே இடத்தில் கூடி, மகிழ்ச் சியுடன் இந்த விழாவைக் கொண்டாடினார்கள்; கைதட்டி ஆரவாரம் செய்து

31