பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 1 13:

யாகத் தெய்வத்தின் மேல் ஆ ைண யி ட் டு எழுதி யிருப்பார்கள்?’ என்று யோசித்தார். யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? பார்க்கலாமென்று கல்யாண மு ய ற் சி ைய நிறுத்திக் கொண்டார். -

டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் பாமசிவம் வ ங் க லு க் கு வந்தான். ரங்கநாத முதலியாருடைய வீட்டிற்குச் சென்று, தானே கடிதம் எழுதியதாகவும். தக்க வரன் ஒருவனைப் பார்த்திருப்பதாகவும் முடிந்தால் தை மாதம் கல்யாணம் நடத்திடலாமென்றும்சொன்னான். அன்று. அவனுக்கு ஒரு பு தி ய ஆச்சரியமான வி ஷ ய ம் தெரிய வந்தது. ரங்கநாத முதலியார் வீட்டில் இரண்டு பார்வதிகள் இருந்தார்கள்; ஒருத்தி அவர் பெண். மற்றொருத்தியே பரமசிவம் தேடிய பார்வதி. அம்மை வார்த்த முகத்தை உடையவள் ரங்கநாத மு த லி யார் பெண். அவளுக்குக் கல்யாணம் ஆகியிருந்தது; தன்னுடைய பார்வதியோ சர்வாங்க சுந்தரியாக இருந்தாள். தன் நண்பன் அவசரத் தில் ஒன்றுக்கொன்று தாறுமாறாக விசாரித்து எழுதி விட்டானென்று அப்பொழுது அவன் ஊ கி த் து அறிந்து கொண்டான். அம்மாவைக் கொண்டு வந்து காட்டி எப்படி யாவது சம்மதம் பெற்று விடலாமென்று ஒரு துணிவு. பிறந்தது. -

"நீங்கள் யார் என்று சொல்லவில்லையே' என்று கேட்டார். முதலியார்.

அதெல்லாம் பிறகு தெரியும்' என்று சொல்லி விட்டு விடை பெற்றுக் கொண்டான் பரமசிவம்.

தாயை அழைத்துக் .ெ க | ண் டு வந்து காட்டினான். "அடே, ந ம் ம. சுப்பிரமணிய முதலியார் பெண் பார்வதி: இவளைத்தான் நீ ஒரு நாள் அடித்து விட்டாய் அதற்காக உங்கள் அப்பாவுக்கும். இவள் அப்பாவுக்கும் சண்டையாகி விட்டது என்று பழைய கதையை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டு சர்வ சாதாரணமாகச் சொன்னாள்.

அதைக் கேட்கும்போது அவனுக்கு நெஞ்சு அடித்துக்