பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. தை சொல்லுகிறார் கி. வா. ജ. 43

விட்டாள்; ' சதாசிவத்துக்கும் தங்கத்துக்கும் சீ க் கி ர ம் முடிச்சுப் போட்டு விட்டால் நான் சந்தோஷமாகச் செத்துப் போவேன்' என்று அ வ ள் சொன்னாள். அ ந் த க் கல்யாணப் பேச்சிலே கூட அபசகுனம் போல அவள் தான் செத்துப் போவதையும் சேர்த்துச் சொன்னாள்.

அவள் அன்றைக்குச் .ெ சா ன் ன வார்த்தைகள் சதா சிவத்தின் மனத்திலே உறைத்தன; யாவருடைய உள்ளத் திலும் இருந்த யோசனை அன்றுதான் முதல் மு. த ல க அவனுக்குத் தெரிந்தது. அதைப் பற்றி யோசிக்கும் மன நிலை முன் இருக்கவில்லை; அதைப் பி ற ர் கூற வு ம் இல்லை. அன்றுதான் அவனுக்கு தங்கத்தின் உண்மை யான ஸ் வ ரூ ப ம் தெரி தது. பெண்ணென்பது மாயப் பிசாசமென்று சாமியார்கள் மூலமாகத் தெரிந்து கொண்டி ருந்த அவனுக்குத் தன் அருகே ஒரு பிசாசு வளருகின்ற தென்ற விஷயம் அப்போதுதான் தெரிந்தது. அன்றுமுதல் அவன் பட்டினத்துப் பிள்ளையின் பாடல்களை அதிகமாகப் பாடலானான். மாத்ர்களைப் பழிக்கும் பாடல்களைப் பாடிப் பாடித் தன் மனத்திலே ஒரு வெறுப்பை உண்டாக்கிக் கொண்டான். தங்கத்தோடு சகஜமாகப் பழகுவது போது அவளைக் க ண் டா ல் .ெ வ று த் து ஒதுக்கும் பழக் க ம்

அவன்பாற் குடிகொண்டது

தங்கம் எதிர்பாராத இந்த மாறுதலைக் கவனித்தாள். அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஆனாலும் அவளுடைய தாயும் சதாசிவத்தின் த ந் ைத யு ம் சீ க் கி ர த் தி ல் கல்யாணத்தை முடித்து விட வேண்டுமென்று எண்ணி ஏற்பாடு செய்யத் தொடங்கினர். சதாசிவம் அதை அறிந் தான். நான் இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் கல்யாணத்தைப் பற்றின பேச்சை என்னிடம் எடுக்க வேண்டாம்' என்று வெட்டொன்று துண்டிரண்டாகச சொல்லிவிட்டான். அப்போது வந்திருந்த சாமியார் ஒருவர் இப்படி மனோ விகாரம் இல்லாத ஒரு பிள்ளையை வற்புறுத்துவது பிசகு' என்று வைத்தியநாதம் பிள்ளையிடம் சொல்லவே, அவர் மேலே தம் குமாரனைத் தொந்தரவு செய்யவில்லை.