பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 விடுதலை

பெண்ணைப் பெற்ற செல்லம்மாள் அடைந்த வருத்தம் சொல்லி முடியாது. அவளுடைய ஜீவாதாரமாக இருந்த நம்பிக்கையே குலைந்து போவதென்றால் அந்தப் பெண் பேதை சகிப்பாளா? சதாசிவத்தினிடம் தனியே கெஞ்சிப் பார்த்தாள்; தம்பி, உன்னை நம்பித்தானே நான் உயிர் வைத்திருக்கிறேன்? என் தங்கத்தை நான் எங்கே கட்டிக் கொடுப்பேன்!’’ என்று அழுதாள். .

தங்கம் இந்த இடியைக் கேட்டுக்கதிகலங்கிப் போனாள், சதாசிவத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் ஒரு சோகப் பார்வை தோன்றும். ஆழமறியாத அந்தச் சோகத் தை அவள் வாயால் .ெ சா ல் ல வலியற்றிருந்தாள், ஆன்ாலும் அந்தப் பார்வையிலே கொந்தளித்த சோகத்தை கண்னுடையவர்கள் தெரிந்து கொள்ளலாம். சதாசிவத் திற்குதான் அந்தக் கண் இல்லையே முகத்திற் கண் கொண்டு பார்க்கின்ற மூடர் காள், அகத்திற் கண் கொண்டு பார்ப்பதே ஆனந்தம்” என்று திருமந்திரத்தை உரு ப் போடும் அவனுக்குக் காதலும், அதனை இழப்பதனால் உண்டாகும் சோகமும் எப்படித் தெரியப் போகின்றன !

நாட்கள் கடந்தன. நம்பிக்கை குலைந்தது. இனி அடுத்தபடி செய்ய வேண்டியது என்ன ?' என்ற கேள்வி வைத்தியநாதம் பிள்ளையின் கருத்திலே எழுந்தது. தாயும் மகளும் படும் அவஸ்தையைப் பார் த் து அவர் உள்ளம் உருகினார். கடைசித் தடவை பிரயத்தனம் செய்து பார்ப் போமென்று எண்ணிச் சதாசிவத்தினிடம் வந்தார் , தம்பி, உன் அத்தைக்கு வேறு ஆதரவு இல்லை . இதுவரையில் உனக்கே தங்கத்தைக் கட்டிக் கொடுப்பதாகத் தீர்மானமாக எண்ணியிருந்தோம்; ஆகையால் வேறு இடங்களில் முயற்சி பண்ணவில்லை. இப்போது தி டீ .ெ ர ன் று நீ மறுத்து விட்டாய், நான் உன் அத்தைக்கு முன்பே வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதைக் காப்பாற்ற வேண்டாமா ?” என்றார். : . . , , என்ன வாக் குறு தி?’’

"நான் செல்லம்மாளைப் பாதுகாப்பதாகவும் நீ