பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*54 சிற்பியின் கனவு

சென்றான். முருகக் கடவுளின் விக்கிரகம் ஒன்றை அமைக்க ஆரம்பித்து விட்டான்.

& တိီ જૈ. லட்சணம் பி ச க | ம ல் ஆற அமர அவன் அந்த விக்கிரகத்தை அமைத்தான். வித விதமாக நூறு உளிகளை வைத்துக்கொண்டு வேலை செய்தான். அந்த உளிகளால் அவன் கொத்தினானென்று சொல்வது பிழை உளிகளின் ரூபத்தில் இருந்த எழுதுகோலால் அந்தத் திவ்ய மூர்த்தியை எழுதினான் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். துணையில்லாமல் தனியே இந்த வேலையை அவன் செய்து வந்தாலும் ஒவ்வொரு நாளும் மாலைக் காலத்தில் அவனோடு பேசிப் பொழுதுபோக்க ஒரு கிழவர் வருவார் . அவர் ஒரு கவிஞர், கலைஞனும் க வி ஞ ரு ம் முதுமை ஒன்றினால் மட்டும் சமானமானவரென்று சொல்வதற்கு இல்லை அறிவிலும் புகழிலும் தெய்வ பக்தியிலும் கலைத் திறமையிலும் இரு வ ரு ம் துணைவர்கள். சிற்பி பல கோயிலில் மூர்த்திகளை அமைத்தான் : கவி பல புராணங் க்ளை இயற்றினார். க ண் ணு க் கு இன்பந்தரும் சிற்ப வித்தகத்தால் சிற்பி சிறப்படைந்தான் ; கருத்துக்கு இன்பம் தரும் கவிதைத் திறமையால் க வி ஞ ர் சிறப்பெய்தினார். இரண்டு பேரும் பேசிக்கொண்டே இருப்பார்கள். தெய்வ லட்சணங்களைச் சிற்பி சொல்வான் ; தெய்வத்

திருவிளையாடல்களைக் கவிஞர் பேசுவார். -

இரண்டு கிழவர்களும் ஒருவருக்கு ஒருவர் இன்றியமை யாதவராக விளங்கினார்கள். காலம் இன்பமுடையதாகச் சென்று கொண்டிருந்தது. சிற்பி குடிசையிற் கொணர்ந்த கல் உருப் பெற்று அங்கம் படைத்து வந்தது.

எல்லாம் முடிந்து விட்டது. கிழட்டுச் சிற்பி கூலிக்கு வேலை செய்யாமல் இருதய பூர்வமான ஆர்வத்தினால் செய்தது அந்த விக்கிரகம். ஆதலால் அது மாசுமறுவற்ற மூர்த்தியாக விளங்கியது. பல காலம் ஆ ரா ய் ந் து