பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சாதித் தடை

பார்த்துச் சிரித்தான்; 'கல்யாணமா? இந்த அநாதைக்கு யார் பெண் தருவார்கள்?' என்று கேட்டான்.

அநாதையா? அ ப் படி இ ன் ென ரு முறை சொல்லாதே தம்பி அப்படிச் .ெ சா ன் ன ல் என் இருதயத்தில் வாள் எறிந்தது போல் இருக்கிறது. நீ இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன். நானும் குப்பாயியும் உனக்குச் சொந்தமல்லவா? இந்த ஊர்க்காரனாகப் போன பிறகு நீ எப்படி அநாதையாவாய்? அப்படிச் சொல்லாதே தம்பி!’’ அவன் சொல்லிய வார்த்தைகளில் அவனுடைய உள்ளத்தின் நைவு வெளிப்பட்டது.

"அப்படியானால் நான் உங்கள் சாதிதானே? எனக்கு என்று வேறு சாதி ஏது?’ என்று கேட்டான் செல்லத்தம்பி. கவுண்டன் வகை தெரியாமல் விழித்தான். கவுண்டர் களுடைய சாதிக் கட்டுப்பாடு மிகவும் கடுமை. தம்பி தன் திட்டில் சாப்பிடலாம்; இருக்கலாம்: எல்லாவற்றிலும் அவன் பி ச் ச | ண் டி யி ன் பிள்ளை. கல்யாணமென்றால் அவன் என்ன சாதி?' என்ற கேள்வி: அட பாழும் சாதியே! என்று ம ன சு க்குள் வைது கொண்டான் கவுண்டன், இவன் முகத்தில் ராஜகளை இருக்கிறது. இவனிடம் ஊராருக்கெல்லாம் பிரியம். இவனைக் கட்டிக் கொள்வதில் பெண்களுக்கு அளவிறந்த விருப்பம் ஆனால் நடுவிலே சாதி என்று ஒரு வேலி! கேடுகெட்ட சாதி!' என்று பல்லைக் கடித்தான். -

அந்தச் சாதி விஷயந்தான் பெரிய முட்டுக் கட்டையாக நின்றது. உள்ளங்கள் கரைந்து ஒன்றாகின்றன; அழகும் அறிவும் சேர்வதற்குச் சித்தமாகின்றன; யா ரு க் கு ம் அதனால் பெரிய நன்மையே உண்டாகின்றது. ஆனால் இவ்வளவு நல்ல எண்ணங்களிலும் சாதி புகுந்து விஷமாக்கி விடுகிறது. பாழும் சாதி! . -

சாதி தெரியாவிட்டால் கல்யாணம் இந்த இனத்தில் பண்ணுவது க ஷ் - ம். இ வ. அ. க்கு யார் பெண் கொடுப்பார்கள்? நம் சாதியென்று தெரிந்தால் காளியைக் கிட்டிக் கொடுத்து விடலாமே!’ என்று நினைந்து நினைந்து ஏங்கினான் பிச்சாண்டி.