பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அயில்வேலன் கவி

இறைவனிடத்தில் பக்தியை உண்டாக்கி வந்தார்கள், நம் நாட்டுப் பெரியோர்கள். மரண பயம் உண்மையில் மனத்தில் தோன்றினால் அழுத்தமான பக்தி உண்டாகும். அதனால்தான் 'பயபக்தி' என்ற தொடர் வந்தது.

ஒரு வீட்டிலே ஒருவர் இறந்து போகிறார். அயல் வீட்டுக் கிழவர் மயானம் வரையிலும் அந்தப் பிணத்தோடு சென்று வருகிறார். மயானத்திலே அவர், "உம்; எல்லோரும் இப்படிப் போக வேண்டியதுதான். இன்றைக்கு இல்லாவிட்டால் நாளைக்கு யமன் வருவான்" என்று சொல்கிறார். ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் அந்த அறுபது வயசுக் கிழவர் இன்னும் அறுபது ஆண்டுகளுக்குரிய குத்தகைச் சீட்டில் கையெழுத்துப் போடுகிறார். அவருக்கு உண்மையிலேயே நாளைக்கு யமன் வருவான் என்ற பயம் ஏற்பட்டிருந்தால் அப்படிச் செய்வாரா? வீட்டுக்கு வந்தவுடனேயே அவருக்குப் பயம் போய்விடுகிறது. மயானத்தில் தோன்றிய அறிவு, குளத்தில் பாசி சற்றே விலகி மறுபடியும் நீரை மூடிக் கொள்வது போல, மறைந்து போகிறது. அவருக்கு ஏற்பட்ட வைராக்கியம் ஸ்மசான வைராக்கியம்.

ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டுவிட்டதானால், அவன் அந்த நெருப்பை அணைக்க, "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று தவிதவித்து ஒடுவான். "இந்தா அப்பா, இது மிகவும் சுவையான அல்வா" என்றால் அவன் அதனை வாங்கித் தின்ன நிற்பானா? "காசு கொடுக்க வேண்டாம் அப்பா இனாமாகவே தின்றுவிட்டுப் போ" என்றால்தான் நிற்பானா? "எங்கே நீர்? எங்கே நீர்?" என்று அலறுவதை நிறுத்த மாட்டான். மரணம் என்கிற துன்பத்தை நினைத்துப் பார்த்து, அது தனக்கு வந்து விடுமே என்னும் உண்மையான பயத் தீ ஒருவனைப் பற்றிக் கொண்டுவிட்டால் அதனை அணைக்க, "எங்கே அருள் தண்ணீர்? எங்கே அருள் தண்ணீர்?" என்று அலறித் தேடி ஒட மாட்டானா? ராமகிருஷ்ண பரமஹம்சர் தீவிரமான பக்தி எப்படி இருக்கும் என்பதை விளக்குகிறார். சீடன் தன் குருவை, "எப்படிப் பக்தி செய்வது? என்று கேட்டானாம். குரு அவனை, "இங்கே வா" என்று அழைத்துக் கொண்டு ஒரு குளத்திற்குப் போனார். அவனை அந்த நீரில் குளிக்கச் சொன்னார். அவன் அந்தக்

99