பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

இரவில் நன்றாக யோசித்துப் பார். உன் படைகள் எல்லாம் அழிந்துவிட்டன. நீ துணைவர்கள் இன்றி இருக்கிறாய். ஆகவே சீதையைத் திருப்பி அனுப்பிவிடுவோம் என்ற எண்ணம் தோன்றலாம். அப்படித் தோன்றினால், நாளைக்கு நீ வரவேண்டியதில்லை. அப்படியின்றிப் போர் செய்யும் எண்ணம் இருந்தால் நாளைக்கு வா" என்கிறான்.

அங்கே தன்னுடைய போர் வீரத்தைக் காட்டிலும் சிறந்த கருணை வீரத்தைக் காட்டினான் இராமன். இங்கே முருகன் நினைத்திருந்தால் சூரனை ஒரு நிமிஷத்தில் கொன்றிருக்கலாம். ஆனால், இவன் நல்லவனாக மாட்டானா? தேவர்களுடைய அரசை அவர்களுக்கே திரும்பவும் கொடுத்து, அவர்களைச் சிறையிலிருந்து விடுவித்துவிடமாட்டானா?” என்று பல காலம் போரை நீளச் செய்து காத்திருந்தான்; தன் விசுவரூபத்தைக்கூட காட்டினான்.

ஆனால் சூரன் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு வேஷம் போட்டுக் கொண்டு வந்தான். மாயையின் பிள்ளை அல்லவா? பெரிய பெரிய மாயாஜாலங்களைக் காட்டினான். மாயையை அறுத்து எறிகின்றவன் முருகன். அவனிடம் அவன் மாயாஜாலங்கள் செல்லுமா? எவ்வளவு செறிவாக இருள் இருந்தாலும் ஒரு விளக்கைப் போட்டால் அது ஒடிவிடுகிறதல்லவா?

முருகனுக்குச் சூரனைக் கொன்றுவிட வேண்டுமென்ற கோபம் இல்லை. அவனுக்குத் தன் கருணையை வழங்க வேண்டுமென்றே விரும்பினான். ஆகவே அவனுடைய மாயைத் தோற்றங்களை எல்லாம் குலைத்தான். தன் உருவத்தைக் காட்டினான். அப்படியும் அவன் சரணடையவில்லை. பின்பே முருகன் தன்னுடைய படையான வேலை விடுவித்தான். கட்டாரியைப் போன்ற அந்தக் கூர்மையான வேல், கரிய சூரன் உடலில் பாய்ந்து, இரத்தம் கொப்புளிக்க அவனை ஓர் இமைப் போதினில் அழித்தது. போர் நெடுங்காலம் நடைபெற்றாலும் சூரனைக் குத்த வேண்டும் என்ற நினைவு உண்டானது இமைப் பொழுதில்; அந்தக் கணத்தில் முருகன் அவனைச் சங்காரம் செய்து விட்டான். அதனால், "ஓரிமைப் போதினில் கொன்றவனே" என்கிறார் அருணகிரியர்.

"மாயையின் பிள்ளையாகிய சூரன் என்ன என்னவோ உருவங்களை எடுத்தான். தேவர்கள் உய்ய, சூரன் இருக்குமிடத்

158