பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/215

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தனிப்பரமானந்தம்

நம் கண் எதிரே வாழ்ந்த ரமண மகிரிஷியைப் பார்த்தோமே. அவர் சின்னப் பிராயத்திலே குறும்புகள் புரிந்த குழந்தையாக இருந்தார். பின்பு இறைவன் திருவருளில் ஈடுபட்டு, அடைந்த இன்ப நிலையையும் கண்டோம். எத்தகைய முரடர்களாக இருந்தாலும் ஆண்டவனை மெல்ல மெல்லத் தியானம் செய்ய ஆரம்பித்தார்களானால், அவர்களுடைய மனத்திலே அமைதி பிறக்கும்; இன்ப நலங்களைப் பெற்று, தனிப் பரமானந்தத்தைச் சுவைக்கத் தொடங்குவார்கள். அதன்பின் அவர்களுடைய போக்கே மாறிவிடும்.

புளிக்கும் மாங்காய் மரத்திலே இருக்கிறது. பச்சைப் பசேல் என்று இருக்கும் அந்த மாங்காயைப் பறித்தால் கண்ணிர் விடுவது போலப் பால் வடிகிறது. அது பழுத்துவிட்டால் என்ன ஆகிறது? அதன் பச்சை நிறம் பொன்னிறமாகிறது. கடினமாய் இருந்தது போய் நெகிழ்ச்சி பெறுகிறது. அதன் புளிப்பு மாறி இனிப்பாகிறது. நன்றாகப் பழுத்துவிட்டால் யாரும் பறிக்காமல் தானாகவே மரத்திலிருந்து நழுவிவிடுகிறது. அந்த நிலை எப்படி வருகிறது? கொஞ்சம் கொஞ்சமாக வருகிறது. நாமும் ஆண்டவன் பாதத்தை நினைந்து அவனைத் தியானம் பண்ணப் பண்ண, அந்தத் தியானம் உள்ளத்தில் ஏற ஏற உள்ளத்தில் ஆனந்தம் அரும்பும். இது இவ்வுலக வாழ்வில் உண்மையில் நடக்கக் கூடியதே அன்றிக் கற்பனை அன்று.

இறைவனை மெய் அன்பினால் மெல்ல மெல்ல உள்ள ஆரம்பித்தால், தியானிக்கத் தொடங்கினால், வன்மையாகப் பேசுகிற தன்மை மாறிவிடும். அப்புறம் அவர்களுக்குக் கடுமையாகப் பேச வராது. உலகம் முழுவதிலும் வாழும் மக்களைச் சகோதரர்களாகவே பார்க்கும் நிலை வந்துவிடும். இத்தகைய மனப்பக்குவம் வந்துவிட்டால், வள்ளியெம்பெருமாட்டியை முருகன் தேடி வந்தது போல, நமக்கும் அருள் இன்பம் கொடுக்க அவன் ஓடி வருவான்.

தன்னை நாடி இன்பம் நுகர்வானைப்போல ஒடி வந்த முருகனை வள்ளி அணைக்கவில்லை. முதுகு கூனி குறுகிப் போன கிழவனாக வந்தான். நாடகம் ஆடினான். அவள் அவனை லட்சியம் செய்யவில்லை. யானை வந்து அவளைப் பற்றி

207