பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கோபுரம் கிழக்குப் பார்த்திருக்கிறது. வலப்பக்கம் தென்புறம். இடப்பக்கம் வடபுறம்.


   ..............அந்த வாயிலுக்கு
   வடவரு கிற்சென்று கண்டுகொண்டேன்...

இப்படிச் சொல்லும்போதே, "யாரைக் கண்டு கொண்டீர்கள் என்ற கேள்வி பிறக்கிறது. "முருகனைக் கண்டு கொண்டேன்' என்று சுருக்கமாகச் சொல்லிவிடலாம். அப்படிச் சொல்லவில்லை. அவர் பழைய சம்பிரதாயத்தை விட்டுவிடவில்லை. முன்னாலே விநாயகரைச் சொல்வது மரபு அல்லவா? ஆகவே இரண்டடியில் விநாயகக் கடவுளைப் பற்றிச் சொல்கிறார்.

2

விநாயகர்

யார் யார் தம்மை அணுகவில்லையோ அவர்களுக்கு விக்கினத்தை உண்டாக்கி, தம்மைப் பணிந்தவர்களுடைய விக்கினத்தை எல்லாம் நீக்குபவர் விநாயகர்.

நல்ல போலீஸ்காரன் தவறு பண்ணுகிறவர்களைத் துன்புறுத்துகிறான். தவறு பண்ணாதவர்களுக்கு நன்மையும் செய்கிறான். அப்படியே விநாயகரும் இருக்கிறார்.

கூட்டம் கூடுகிற இடங்களிலெல்லாம் போலீஸ்காரன் இருப்பதைப்போல, விநாயகரும் இருக்கிறார். நாற்சந்தியிலும் இருக்கிறார்; நகருக்குள்ளும் இருக்கிறார். அரச மரத்தடியிலும் இருக்கிறார்; ஆற்றங்கரையிலும் இருக்கிறார்; கணங்களுக்குப் பதி அவர்; 'கணபதி' என்ற பெயர் படைத்தவர் பூதங்களுடைய கூட்டத்திற்குத் தலைவர்.

சிவபெருமானே அவருக்குப் போலீஸ் உத்தியோகம் தந்தார். சட்டத்தை உண்டுபண்ணினவனே சட்டத்தை மீறினால் அந்தச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக அவனைப் போலீசார் கைது செய்து விடுவார்கள். கணபதியாகிய போலீஸ்காரனை நியமித்தது சிவபெருமான்தான் என்றாலும், சட்டத்தை மீறினால் விநாயகர் அவனிடமும் தம் கடமையைச் செய்வார் என்கிற தத்துவம்

40