பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் தொலைத்துக் கொண்டு போ' என்பது இன்னாச் சொல். இந்த நான்கும் இல்லாமல் செய்யும் தர்மம் உயர்ந்தது என்று வள்ளுவர் சொல்கிறார். 'இறைவன் திருவருளினால் கொடுக்க வாய்ப்புக் கிடைத் திருக்கிறது' என்ற நினைப்பு இவற்றை அழிக்கும். 'ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்குக்கூடத் தெரியக் கூடாது' என்பர். கையா கொடுக்கிறது? கையை உடையவன் கொடுக்கிறான்; கை கருவியாக நின்று கொடுக்கிறது. நாம் கொடுக்கிறோம் என்று கை நினைப்பது இல்லை. அது போல நம்மைக் கருவியாகக் கொண்டு இறைவன் கொடுக்கிறான் என்று உணரவேண்டும். நாம் நம் விருப்பப்படி கொடுக்கிறோம் என்ற எண்ணம் தக்க தன்று. நினைத்தபடி செய்யக் கூடிய ஆற்றல் நம்மிடம் இருக்கு மானால் எத்தனையோ அரிய செயல்களைச் செய்வோம். அவ் வாற்றல் நம்மிடம் இல்லை. அப்படி இருக்க, நாம் கொடுக் கிறோம் என ஏன் நினைக்க வேண்டும்? ஆண்டவனது சித்தப்படி கொடுப்பதற்கு மனம் முந்துகிறது; கை கொடுக்கிறது என்றே எண்ண வேண்டும். கொடுக்கும்போது அன்புடன் கொடுக்க வேண்டும். இறை வனிடத்தில் அன்பு வேண்டும்; இரப்பவனிடத்திலும் அன்பு வேண்டும். நாம் கருவியாக இருந்து கொடுக்கிறோம் என்று நினைந்து கொடுக்க வேண்டும். 'வையிற் கதிர் வடி வேலானை வாழ்த்திக் கொடு" என்று அருணகிரியார் சொல்கிறார். யாருக்கு? யாருக்குக் கொடுக்க வேண்டும்? 'வறிஞர்க்கு என்றும் கொடுங்கள் என்கிறார். யார் வறுமை உடையவர்களோ அவர்களுக்குக் கொடுப்பது கொடை. “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறிஎதிர்ப்பை நீர் துடைத்து' என்கிறார் வள்ளுவர். 'வறியார்க்குக் கொடுப்பதே கொடை. மற்றவர்களுக்குக் கொடுப்பது, பின்னாலே நமக்கு வேறு வகையில் உதவி அவராலே கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொடுப்பதே ஆகும்' என்பது அவர் கருத்து. 93