பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லும் பொருளும் செல்லாப் பொருளும் குறிப்பு வறிஞர்க்கு என்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கள். 'நொய்யிற் பிளவள வேனும் என்று உம் போட்டுச் சொல்வதன் பொருள் என்ன? நொய்யில் பிளவுதான் கொடுக்க வேண்டுமென்பது இல்லை. ஒரு பணக்காரனிடம் ஏழைப் பிள்ளை ஒருவன் வந்து, "ஐயா, நான் படிப்பதற்கு மிகவும் துன்பப்படுகிறேன். ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள் என்று சொன்னால் ஒரே ஒரு புத்தகம் வாங்கிக் கொடுங்கள் என்று பொருள் ஏற்படும். அப்படி இல்லா மல், 'ஒரு புத்தகமாவது வாங்கிக் கொடுங்கள்' என்றால் என்ன பொருள், 'எல்லாப் புத்தகங்களையும் வாங்கிக் கொடுத்தால் நல்லது' என்ற குறிப்பு அதில் தோன்றுகிறது. அதைப் போல், "நொய்யிற் பிளவளவேனும் பகிர்மின்கள்' என்றால், 'உங்களிடம் இருப்பது எல்லாவற்றையும் கொடுத்தாலும் கொடுக்கலாம். அது நல்லது' என்ற குறிப்புத் தோன்றுகிறது. பிளவளவு கடைசிப் பட்சம்; உயர்ந்த பட்சத்துக்கு அளவு இல்லை. யாரோ ஒரு பெரிய பணக்காரக் கிறிஸ்துவரிடம் ஒரு பிச்சைக்காரன் வந்தான். அவனுக்கு அந்தப் பணக்காரன் ஒரு தம்படி கொடுத்தான். அந்தப் பிச்சைக்காரன், "நீயும் நானும் சகோதரர்கள் என்று கர்த்தர் சொல்கிறார். உன்னுடைய சொத்தில் பாதிக்கு உரிமை உடைய எனக்கு ஒரு தம்படி போடுகிறாயே?" என்று கேட்டானாம். அதற்கு அந்தப் பணக்காரன், 'ஆம்; அவர் சொன்னது உண்மை. அவர் சொன்னதை எண்ணி நான் என்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் பிரித்து எல்லாக் கிறிஸ்துவர் களுக்கும் கொடுப்பதானால் உனக்கு இந்த ஒரு தம்படிகூட வராது. ஆகவே அந்தத் தம்படியையும் கொடுத்துவிட்டுப் போ அப்பா' என்றாராம். பிச்சைக்காரன் நடைமுறையில் நடக்காததைக் கேட்டான். அருணகிரிநாதர் அப்படிச் சொல்லவில்லை. 'நீங்கள் சோறு சாப்பிடுகிறீர்கள்; அதைக் கொடுங்கள்' என்று சொன்னால் சிலர் மறுக்கலாம். நீங்கள் அரிசி சாப்பிட வில்லையா? அந்த அரிசியைக் கொடுக்க வேண்டாம். அந்த அரிசியில் உடைந்த நொய்யைக் கொடுக்கக் கூடாதா? அதுவும் 95