பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லாம் மறந்த நிலை தமிழ் நூல்களில் சொல்லப் பெறும் பொருள்கள் எல்லா வற்றையும் இலக்கண ஆசிரியர்கள் இரண்டு வகையாகப் பகுத் திருக்கிறார்கள். அகம் என்பதும் புறம் என்பதுமே அந்தப் பகுப்பு ஆகும். மக்கள் வாழ்க்கையிற் பெற வேண்டிய பொருள்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு என்ற அந்த நான்கையும் உறுதிப் பொருள்கள் என்பர். அவற்றையே அகம், புறம் என்ற இரண் டிலும் அடக்குவது தமிழ் மரபு. இன்பத்தை அகம் என்றும், அறம் பொருள் வீடு என்ற மூன்றையும் புறம் என்றும் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அகம், காதல் கற்பு என்ற இன்ப வாழ்க்கையின் வகைகளைச் சொல்வது. புறம், அறம் பொருள் வீடு என்ற மூன்றையும் சொன்னாலும் பெரும்பாலும் பொருளின் வகையாகிய வீரத்தைப் பற்றியே சொல்லும். ஆதலால் அகம் என்றால் காதலும், புறம் என்றால் வீரமுமே முதலில் நினைவுக்கு வரும். காதல் வாழ்க்கையின் பல துறைகளை விரித்துரைப்பது அகப்பொருள் இலக்கணம். வீர வாழ்க்கையின் பல துறைகளை விரிவாகச் சொல்வது புறப் பொருள் இலக்கணம். காதலும் வீரமும் காதலும் வீரமும் இரண்டு கண்களைப் போலத் தமிழர்களால் போற்றப் பெற்றவை. பெண் என்றால் காதலும், ஆண் என்றால் வீரமும் நினைவுக்கு வருகின்றன. பெண்ணின் இயல்பு காதலை உண்டாக்குதல்; விருப்பத்தைக் கிளரச் செய்தல். அதனால், "மாதர் காதல்' என்று தொல்காப்பியம் சொல்கிறது. மாதர் என்ற சொல்லுக்கே காதல் என்று பொருள். பெண்ணின் தன்மை பெட்பு; அதற்கு விருப்பம் என்று பொருள். க.சொ.11-8