பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பிள்ளைக்கு வந்துவிட்டது. "ஐயையோ எங்கள் அப்பாவுக்குப் புளி விளங்காயின் மேலே பிரியம் அதிகம். அது வேண்டுமென்று கையைக் காட்டுகிறாரே, இப்போது கொடுக்கலாமோ?' என்று வேதனைப்பட்டான் அவன். இந்தக் கதை நாலடியாரில் வருகிறது. "சிறுகாலை யேதமக்குச் செல்வழி வல்சி இறுகிறுகத் தோட்கோப்புக் கொள்ளார் - இறுகிறுகிப் பின்அறிவாம் என்றிருக்கும் பேதையர் கைகாட்டும் பொன்னும் புளிவிளங்கா யாம்' (சிறு காலை - இளம் பருவத்தில், செல்வுழி வல்சி - போகும் இடத்துக்குரிய உணவு, தோட்கோப்பு - தோட்சுமை.) தங்கக்கட்டியை மறைத்து வைத்தவருக்கு அது சமயத்தில் பயன்படவில்லை. அவர் வல்வினை நோய் உண்ண வொட்டா மல் தடுத்துவிட்டது. இத்தகைய அநுபவத்திலிருந்தே, உங்கள் அத்தம் எல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் அடிப்பிறகே? என்று கேட்கிறார் அருணகிரியார். "ஆழப் புதைத்து வைக்கின்ற பொருள் எல்லாம் இந்த உலகத்தில் உங்களுக்குப் பயன்படுவ தில்லை. வல்வினையாகிய ஊழிற் பெருவலி அவற்றை இந்த உலகத்தில் நீங்கள் அநுபவிக்கும்படி விடுவது இல்லையே! இங்கே பயன்படாவிட்டாலும் மறுமையிலாவது வருமா என்றால் அங்கும் வராதே. உம்முடைய அடியைப் பின்பற்றி வருவதாக இருந்தால் எவ்வளவு புதைத்து வைத்தாலும் நல்லதுதான். அப்படி வருமா? நீங்கள் நடைபோடும்போது உங்களோடு உங்கள் நிழல் வருவது போல அவை வருமா? இப்படி அம்முனிவர் கேட்கிறார். புதைத்து வைத்தல் பழங்காலத்தில் பாங்கிகள் இல்லை. திருடர்கள் பயமோ அதிகம். ஆகவே அக்காலத்தில் தாங்கள் சேமிக்கின்ற செல்வத்தைத் திருடர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள்ளேயே எங்கேயாவது குழி தோண்டிப் புதைத்து வைப்பது வழக்கம். 128