பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு சுகத்தை விட்டுவிடச் சித்தமாக இருப்பார்கள் மக்கள். இந்தப் பிறிவியில் இந்திரிய சுகம் என்ற அநுபவம் நமக்குத் தெரிகிறது. வேறு வகையான அனுபவம் நமக்கு இல்லை. இப்போது உண்டாகும் சுகத்திற்குரிய கருவியாக இருக்கிற உடம்பை விட மனம் வருவதில்லை. வேறு வகையான இன்ப அநுபவம் உண்டு என்று சிலர் சொல்கிறார்கள்; ஆனால் நாம் அதை நம்புவது இல்லை. அப்படி ஒர் அநுபவம் இருக்கிறது உண்மைதான் எனத் தெரிந்து, அது நமக்குக் கிடைக்கும் என்றும் தெரிந்தால் அதை நாடுவார்கள் அல்லவா? அப்படித் தெரிந்து கொண்டவர்களே ஞானிகள். அவர்கள் மரணத்துக்கு அஞ்சுவதில்லை. விடுதலையும் சிறை மாற்றமும் ஒரு பெரிய சிறைக்கூடம் இருக்கிறது. அந்தச் சிறைக் கூடத்தில் பல வகையான கைதிகள் இருக்கிறார்கள். அவர்களோடு சத்தியாக்கிரகம் செய்து சிறைப்பட்ட அரசியல் கைதிகளும் இருக் கிறார்கள். அவர்களில் இரண்டு பேர் ஒருநாள் வெளிவந்தார்கள். ஒருவன் சத்தியாக்கிரகம் செய்து சிறைக்குச் சென்றவன். அவனை வரவேற்க நாலுபேர் மாலையுடன் வெளியே காத்துக் கொண் டிருக்கிறார்கள். வந்தவுடன் அவனுக்கு மாலையிட்டுக் காரில் ஏற்றி அழைத்துச் செல்கிறார்கள். நேரே வீட்டுக்குப் போகிறான் அவன். மற்றொருவனும் வெளிவருகிறான். அவனைச் சுற்றியும் நாலுபேர் இருக்கிறார்கள். அவன் கழுத்தில் மாலை சூட்ட வில்லை. கையில் விலங்கு பூட்டிக் காரில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள். இரண்டு பேரும் சிறையிலிருந்து வெளிப்பட்டு நல்ல காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தவர்களே. முதல்வனுக்கு விடுதலை. ஆகவே மிக்க மகிழ்ச்சியோடு மாலையும் கழுத்துமாகத் தன் வீட்டுக்குச் செல்கிறான். மற்றொருவனுக்கோ சிறை மாற்றம். இந்தச் சிறை யிலிருந்து கோயம்புத்துரர்ச் சிறைக்கு அனுப்பப்படுகிறான். நாலு பேர் காவலாக உடன் இருக்கிறார்கள். இரண்டு பேரும் சிறை யிலிருந்து வெளி வந்தவர்கள்தாம். ஆயினும் ஒருவனுக்கு விடுதலை; மற்றொருவனுக்குச் சிறை மாற்றம். இரண்டும் ஒன்றாகுமா? ஒரு சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றப்படுபவன் இன்னும் எத்தனை சிறைகளுக்கு மாற்றப்படுவானோ, தெரியாது. 143