பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரணம் இல்லா வாழ்வு கதையாக இருந்தாலும் இதன் உள்ளுறை பொருளை உணர வேண்டும். இறைவன் திருவடியில் ஈடுபட்டவர்களுக்குச் சிறை மாற்றம் இல்லை. அவர்கள் அடையும் மரணமே அவர்களுக்கு உடம்பினின்றும் உயிர்பெறும் விடுதலை ஆகிவிடுகிறது. பாவம் செய்கிறவர்களுக்கோ சிறை மாற்றம் போல உயிர் இக்கூட்டை விட்டு மற்றொரு கூட்டை அடைய மரணம் ஏற்படுகிறது. நாம் விடுதலை அடையப்போகிறோம் என்ற நம்பிக்கையுடைய கைதி தன்னுடைய விடுதலை நாள் என்றைக்கு வரும் என ஏங்கிக் காத்துக் கொண்டிருப்பது போலவே, தம் உயிர் இனி வேறு எந்த உடலுக்கும் போகாமல் நேரே வீடாகிய மோட்சத்திற்குப் போகும் என்பதை ஞானத்தினால் அறிந்தவர்கள், என்றைக்கு உயிர் விடுதலை அடையும் எனக் காத்துக் கிடப்பார்கள். தனக்கு விடுதலை கிடையாது, சிறைமாற்றந்தான் உண்டு என்பதை உணர்ந்த கைதி, 'இந்தச் சிறையிலேயே இருந்து விடலாமே. இங்கே காவலர்கள் மிகவும் நல்லவர்கள். நம்மை அதிகம் அடிப்ப தில்லை. புகை பிடிக்கச் சுருட்டுக் கொடுக்கிறார்கள். புதிய சிறை எப்படி இருக்குமோ? என்றெல்லாம் எண்ணி அஞ்சிச் சிறை மாற்ற நாளை எதிர் நோக்கிப் பயப்படுவார்கள். அவ்வாறே அஞ்ஞானிகள் தமக்கு மரணம் வருகிறதே என வருந்துவார்கள். பரிபூரணம் நம்மைப் போன்றவர்கள் இறந்தால் மரணம் அடைந்தார்கள் என்று சொல்லலாம். ஞானிகள், சித்தர்கள் காலமானால் பரி பூரணம் அடைந்தார்கள் என்று சொல்வது வழக்கம். பரிபூரணம் என்றால் நிறைவு என்று பொருள். யார் வாழ்க்கையில் நிறைவு அடைந்தார்களோ, அவர்கள் பரிபூரணம் அடைந்தவர்கள். சிறை வாச காலம் நிறைவேறியவர்கள் அவர்கள். மரணம் என்பது அவர் களுடைய மரணம் இல்லாப் பெரு வாழ்வின் பிறப்பு. என்றைக்கு மரணம் அடைகிறார்களோ, அன்றைக்கே அவர்களது அமர வாழ்வு தொடங்குகிறது. அதற்கு அப்பால் மீட்டும் உடம்பாகிய சிறையில் புகும் வேலை அவர்களுக்கு இல்லை. பயண முடிவு ஒருவர் திருவண்ணாமலை போகிறார். மெயில் வண்டியில் ஏறி விழுப்புரத்தில் போய் இறங்கிப் பிறகு பாசஞ்சர் வண்டியில் 1.45