பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 வீரப்புகழ் முருகன் பிரதாபத்தை உடையவன். புகழ் இரண்டு வகை யில் வருகின்றது. வீரத்தினால் வருகின்ற புகழ் ஒன்று; ஈகை யினால் வருகின்ற புகழ் ஒன்று. 'ஈதல் இசைபட வாழ்தல்" என்று வள்ளுவர் சொல்கிறார். யார் கொடுக்கிறார்களோ அவர்கள் புகழ் பெறுகிறார்கள். ஈகையினால் வருகின்ற இப்புகழைக் கீர்த்தி என்பர். வீரத்தினால் அடைகின்ற புகழ் பிரதாபம். முருகன் மிக்க பிரதாபம் உடையவன்; வீரத்தினால் வந்த புகழ் உடையவன். தாலி காத்தவன் முருகப் பெருமான் உலகம் எல்லாம் புகழ்கின்ற பிரதாபம் உடையவன் என்பதற்கு ஒர் உதாரணம் சொல்கிறார். அவனுடைய வீரச் செயலுக்கு அடையாளமாக என்ன இருக்கிறது? ஜயக்கொடி எங்கே பறக்கிறது? வெற்றித் தூண் எங்கே நாட்டப்பட்டிருக்கிறது? தான் செய்த காரியத்தைத் தானே பெரிதாகச் சொல்லிக்கொள் பவன் அல்ல அவன். நாலானாவுக்குச் செய்கின்ற தர்மத்தை எட்டணச் செலவழித்து எழுதி வைக்கிறவர்களைப் போல வைத்துக் கொள்பவன் அல்ல. ஆனால் அவனுடைய பெரிய வீரத்திற்கு அடையாளம் எங்கே இருக்கிறது தெரியுமா? இந்திர லோகத் திற்குப் போங்கள். இந்திரனின் அந்தப்புரத்திற்குப் போங்கள். இந்திராணியைப் பாருங்கள். அவள் கழுதைப் பாருங்கள். 'பார்த் தால் என்ன தெரியும்?' என்றா கேட்கிறீர்கள்? அவளுடைய கழுத்தில் மங்கல நாண் இருக்கிறது அல்லவா? அந்த மங்கல நாண்தான் முருகப் பெருமானுடைய பிரதாபத்திற்கு அடையாளம். முருகனுடைய பிரதாபத்திற்கும், இந்திராணியின் கழுத்தில் உள்ள மங்கல நானுக்கும் என்ன சம்பந்தம்? அந்த மங்கல நாண் சிறியது; மிக மெல்லியதுதான். இவ்வளவு சிறிய மெல்லிய நாண் முருகன் இல்லாவிட்டால் அவள் கழுத்தில் இல்லாமல் போயி ருக்கும். சூரன் வென்றிருந்தால் ஒர் அசுரக் குழந்தை இந்திரனைக் கொன்றிருப்பான். இந்திராணியின் மங்கல்ய தந்து, தாலிக் கயிறு, வாங்கப்பட்டிருக்கும். அதை ரட்சிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு எம்பெருமான் முருகன் அமர்க்களத்திற்குப் 15C)