பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளியை வேட்டவன் காதலை வேண்டித் தினைப்புனத்தில் வந்து காத்திருந்து மணந்தது, தமிழர் கூறும் களவுக் காதலை மேற்கொண்ட விளையாடல். கற்பு மணம் என்பது முன்னாலே கல்யாணம் செய்து கொண்டு பின்னாலே காதல் மீதுர்ந்து அன்பு வாழ்க்கை வாழ்வது. களவு மணம் என்பது முன்னாலே பழகிக் காதல் செய்து அன்பு மீதுர்ந்து இருவரும் மணந்து கொள்வது. களவு மணம் செய்து கொள்வது தமிழர் மரபு. தமிழினிடம் பெருங்காதல் கொண்ட முருகன் தமிழ்நாட்டு வள்ளிபால் காதல் கொண்டான். தமிழின்பால் உள்ள காதல் அதனாலும் தெரிகிறது. அதனாலே அந்தத் தமிழால் வைதாலும் அவன் அருள் செய்வான். மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன், முத்தமிழல் வைதாரையும் அங்கு வாழவைப்போன். நிந்தாஸ்துதி வைவதே வாழ்த்தாகிற சந்தர்ப்பம் வேறு ஒன்று உண்டு. வடமொழியில் 'நிந்தா ஸ்துதி” என்று சொல்லுகிற மாதிரியே தமிழிலும் உண்டு. இறைவனைப் பார்த்து, கூத்தன், பித்தன், குறை மதியன் என்றெல்லாம் சொல்லும் போது குறைவு படுத்துவது போல இருந்தாலும், பொருளைப் பார்ப்பின் புகழாக இருக்கும். குறைமதியன் என்றால் குறைவான அறிவுடையவன் என்று தோன்றும். ஆனால் பூரண சந்திரனல்லாமல் கலையில் குறைந்த பிறையை அணிந்தவன் என்பதே அதன் பொருள். இது நிந்தாஸ்துதி. பழிப்பது போலப் புகழ்தல் என்று தமிழில் சொல்வார்கள். இது ஒர் அலங்காரம். காளமேகத்தின் பாடல் காளமேகப் புலவர் நிந்தாஸ்துதியில் வல்லவர். அவர் ஓர் ஊருக்குப் போய்க் கொண்டிருந்தார். போகும் வழியில் இருட்டி விட்டது. அங்கே ஒரு பிள்ளையார் கோயில். அக்கோயிலின் திண்ணைமீது தம் கையில் இருந்த முடிச்சை வைத்துக்கொண்டு படுத்து உறங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தால் அவர் வைத்திருந்த முடிச்சைக் காணவில்லை. அவருக்குக் கோபம் வந்தது. 'பிள்ளையாரே, உம்மை நம்பித் தானே நான் இங்கே 165