பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலித்த விண்ணப்பம் கந்தர் அலங்காரம் 108 பாடல்களை உடையதாக இப்போது இருக்கிறது. 108 மணிகள் கொண்ட ஜபமாலையைப் போல இருக்கிறது. குஞ்சமாகிற காப்புப் பாட்டு ஒன்றும், நூலாக 100 பாடல்களும், நூறுக்குமேலும் பொங்கி வழிந்த ஏழு பாடல் களும் ஆக 108 பாடல்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. முருகன் கருணை நோக்கைப் பற்றிச் சொல்லும் சிறப்புடையவை சில. அடியார்களின் பெருமையைச் சொல்வன சில. நம்முடைய குற்றங்களை நினைக்கச் செய்பவை சில. அருணகிரியார் தம் அநுபவத்தைச் சொல்வன சில. இப்பொழுது சொல்லப் போகிற பாட்டு அருணகிரிநாதருடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டது. ஆனந்த வாழ்வு அருணகிரி நாதர் இறைவனால் ஆடகொள்ளப் பெற்றவர். அவனுடைய அருளால் கிடைத்த பேரானந்தத்தை இந்த உடம்பில் இருக்கும்போதே பெற்றார். மற்ற மக்கள் உயிர் உடம்மை விட்டுப் பிரிந்த பிறகு, மரணம் அடைந்த பிறகுதான், பேரின்ப அநுபவம் பெற முடியும். அருணகிரிநாதர் தம் பூத உடம்பு அழிவதற்கு முன்னமேயே ஆனந்த வாழ்வு பெற்றார். அவர் கிளியாக மாறி எம்பெருமான் திருக்கரத்தில் இருக்கிறார் என்பது ஒரு வழக்கு. மற்றவர்கள் மரணம் அடைகின்ற மாதிரி அருணகிரிநாதர் மரணம் அடையவில்லை என்ற ஒன்றை நினைவு வைத்துக் கொண்டால் போதும். அந்த நிலை அவருக்கு எப்படி வந்தது? சித்தர்கள் மரணம் அடையாதிருக்கப் பல விதமான மூலிகைகளை உண்டு பல காலம் வாழ்ந்திருப்பார்கள். பூத உடம்பு அழிந்து போக உயிர் மரணம் அடையும் வாழ்வு கூடாது என்று அருணகிரிநாதர் விரும்பினார். அந்த விருப்பதைக் காட்டுவது இப்போது சொல்லப் போகும் பாட்டு.