பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பொழிவில் விளக்கும் போது இவைகளெல்லாம் உபகாரமா கின்றன. சில இடங்களில் மேற்கோளாகக் காட்டும் பாடல்களுக்கும் விளக்கம் கூறியிருக்கிறேன். திருக்குறட் பாக்களும் திருவாசகப் பாடலும் இப்புத்தகத்தில் விளக்கம் பெறுவதைக் கண்டு, மற்றொன்று விரித்தல் என்று அன்பர்கள் கொள்ள மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். சொல்ல வந்த கருத்துக்கு உபகாரமாக உள்ள அப்பாடல்களின் பொருள் தெளிவாகத் தெரிந்தால்தான் எடுத்துக் கொண்ட கருத்தோடு ஒப்பு நோக்க இயலும்; ஆதலால் விளக்க வேண்டியது இன்றியமையாததாயிற்று. கந்தர் அலங்காரப் பாடல்கள் இலக்கியச் சுவைக்காக மாத்திரம் படிப்பவை அல்ல; அருணகிரியார் பெருமையை உணர்ந்து பாராட்டுமளவில் நிற்பதற்காகவும் இவற்றைப் படிக்கக் கூடாது. நம்முடைய வாழ்க்கைக்குப் பயன்படும் கூறுகள் இவற்றில் உண்டா என்று ஆராய்ந்து, அவற்றை மேற்கொள்ள வேண்டும். இந்தக் கருத்தைச் சொற்பொழிவுகளில் அவ்வப்பொழுது வற்புறுத்தி வருகிறேன். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றிலும் அத்தகைய இடங்கள் சில இருக்கும். 女 வழக்கம் போல் இந்தச் சொற்பொழிவுகளை எழுத்து வடிவம் எடுக்கும்படி செய்யும் அன்பர் ரீ அனந்தன் அவர்கள் உதவி நீளுகிறது; அதனால் புத்தக வரிசையும் நீண்டு வருகிறது. தேனாம்பேட்டைக் கோயில் தர்மகர்த்தர்களுடைய பேரார்வ மும் கேட்கும் அடியார்களுடைய அன்பும் இணைந்து இச்சொற் பொழிவுகளை நன்றாகச் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை எனக்கு அளிக்கின்றன. எழுத்தாக வடிவெடுத்த சொற்பொழிவுகளைப் புத்தகமாகத் திரட்டிக் கோலம் செய்யும் உதவியை அமுத நிலையம் மேற்கொண்டிருக்கிறது. அதன் தலைவர் ரீ. ரா.ரீ. ரீகண்டன் அவர்கள் அன்பே இதனைச் செய்விக்கிறது. எல்லோருக்கும் நன்றி. கி.வா. ஜகந்நாதன் O4, 12.1956