பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை அவன் திருவடி தாமரை மலரைப் போன்றது. அந்தப் பாதாரவிந்தங்களில் அடியார்கள் அருச்சித்த வெட்சி மலர் பொலிவு பெற்றுத் தோன்றுகிறது. தண்டையை அணிந்த திருவடி அது. அதனை அடியார்கள் அரணாகப் பற்றிக் கொள்கிறார்கள். அது தாவடி ஒட்டும் மயிலின் மேல் அமர்கிறது; தேவர் தலையிலே படுகிறது; அருணகிரியார் பா அடியேட்டிலே பதிகிறது. அவன் திருக்கரத்தில் வேல் விளங்குகிறது. அது கூர்மையான வேல். வேதமும் ஆகமமுமே முருகன் கையில் வேலாக விளங்கு கின்றன. அழகுடைய அந்தச் சித்திர வேலால் அவன் சூரனுடைய மார்பையும் கிரவுஞ்ச மலையையும் துளைத்தான். கிரவுஞ்ச மலை சொன்னமயமானது. அதனை ஊடுருவிச் சென்றது அந்தக் கதிர்வேல். அவன் தன் திருக்கரத்தில் கோழிக் கொடியைப் பிடித்திருக் கிறான். குழந்தை முருகன் தன் பன்னிரண்டு கைகளாலும் சப்பாணி கொட்டுகிறான். அப்போது எட்டுத் திக்கிலும் உள்ள மலைகள் பிளந்து பாதி பாதியாய் விழுகின்றன; மேருமலை குலுங்குகிறது. "நாங்கள் பிழைத்துப் போனோம்” என்று தேவர்கள் குதுகலிக்கிறார்கள். ஒரு பாட்டில் முருகப் பெருமானுடைய மாமா வருகிறார். வாமனராகவும் திரிவிக்கிரமராகவும் வருகிறார். 'மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான்' என்று திருமாலைக் காட்டிப் பின்பு அவனுடைய மருகனாகிய முருகனைக் காட்டுகிறார். ★ இந்தச் சொற்பொழிவுகளில் பாடல்களின் விளக்கம் விரிந்து நிற்கிறது. பல பெரியார்கள் சொன்ன கதைகளை இடையிடையே சொல்லியிருக்கிறேன். இராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய கதைகள் வரும். டால்ஸ்டாய் கதை வரும். புதிய கதையும் வரும். அப்படியே பழைய உவமைகளும் புதிய உவமைகளும் விரவி யிருப்பதைக் காணலாம். நுட்பமாக உள்ள கருத்தைச் சொற் க.சொ.11-2 7