பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 அது இப்போது ஒட்டி உலர்ந்து சுக்காகப் போய் விட்டது. எதற்கும் பயன் இல்லாமல் போயிற்று. வெறும் வெந்தயத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். காய்ந்து போன வெங்காயத்தை வீணே சுமந்து கொண்டிருப்பதில்தான் என்ன பயன்? குழம்புக்குப் போடப் பெருங்காயங்கூட வாங்க வேண்டுமென்று எண்ணினேன். இப்போது அந்த எண்ணமெல் லாம் போய்விட்டது. வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் ஒன்றுமே வேண்டாம். வெங்காயம் விரதத்துக்கு ஆகாது. வெறும் சீரக ரசம் பண்ணிச் சாப்பிடலாம் என்று தோன்றிவிட்டது. ஆகையால் சீரகம் தாரும்; மற்றது ஒன்றும் வேண்டாம்' என்று ஏரகத்து முருகப்ப செட்டியாரிடம் சொல்கிறார். “வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன? இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத சீரகத்தைத் தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம் ஏரகத்துச் செட்டியா ரே!" பாட்டு, செட்டியார் என்பதற்குப் பொருத்தமாக இருக்கிறது அல்லவா? இந்தப் பாட்டை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் வெங்காயக் குழம்பு வேண்டாத சாது ஒருவன் சீரக ரசத்தை விரும்பி சீரகம் கேட்பது போலத் தோன்றுகிறது. அது வெறும் தொனிப் பொருள். உண்மைப் பொருள் வேறு உண்டு. முருகனிடம் வெங்காயத்தையும் சுக்கையும் பற்றியா சொல்லிக் கொண்டிருப் பார்? செட்டி என்ற பெயருக்கு ஏற்றபடி அந்தப் பெயர்களின் ஒலி காதில் விழும்படியாகப் பாட்டை அமைத்திருக்கிறார். பொருள், முருகனிடம் எதைக் கேட்க வேண்டுமோ அதைக் கேட்பதாக அமைந்திருக்கிறது. உடம்புக்குக் காயம் என்று பெயர். இது பல நோய்களுக்கு இடமாக இருப்பது; வெப்பம் உள்ளது. ஆகையால் இதுவே வெங்காயம். பல பல உறுப்புக்களை உடைய பெரிய யந்திரம் இது. இதுவே பெருங்காயமாகவும் (பெரிய உடம்பாகவும்) இருக்கிறது. வெறும் காயத்துக்கு மதிப்பு இல்லை. இதனூடே உயிரோட்டம் இருந்தால்தான் மதிப்பு. உயிரில்லாமல் இது உலர்ந்து போனால் இதை யாரும் தொட மாட்டார்கள். வெந்த அயமாகிய அயபஸ்பத்தை வாயில் புகுத்தினாலும் பிணம் உயிர் பெற்று எழாது. பயன் இல்லாத சரக்காகிய இந்த உடம்பைச் 196