பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 பெருமையாகவே பாடி வருவார். கடைசியில் அத்தகைய பெருமை வாய்ந்த திருமாலின் மருகோனே என்று முருகனைக் குறிப்பிடு வார். திருமாலைத் தாழ்வாகச் சொல்ல மாட்டார்; சிறப்பாகவே புகழ்வார். ஒரிடத்தில் அம்பிகையின் அர்ச்சனையாகவே பாட்டு வரும். அவளுடைய திருமகனே எனக் கடைசியில் தம் வழிபடு கடவுளாகிய முருகனை அழைப்பார். இப்படி முருகப் பெரு மானுடைய பெருமையை மற்றத் தெய்வங்களின் சிறப்போடு இணைத்துப் பார்க்கும் உள்ளம் அருணகிரிநாதருடையது. அவரது சமரச உள்ளமாகிய பீடத்தில் கொலுவீற்றிருந்து நடுநாயகமாக ஒளிவிட்டு வாழ்கிறவன் முருகன். இந்தப் புதுமையை அருணகிரி யார் செய்தார். மற்ற அடியார்களைப் போலவே, 'எனக்கு எமனைக் கண்டு பயம் இல்லை. மரணப்ரமாதம் நமக்கில்லையாம்' என்று பாடினார். சிலர், 'யாரைக் கண்டாலும் பயமில்லை” என்று தம் பக்கத்தில் யாரும் வராத வரையில் பேசுவார்கள். வந்துவிட்டால் தலை மறைந்து ஓடி விடுவார்கள்; அல்லது கோழையைப் போலப் பேசுவார்கள். அருணகிரிநாதர் அத்தகையவர் அல்ல. எமனையே நேருக்கு நேர் நிறுத்தி வைத்து, முன்னிலைப் படுத்தி இப்பாட்டில் பேசுகிறார். இதுவும் ஒரு புதுமை. தண்டா யுதமும் திரிசூல மும்விழத் தாக்கிஉன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டா யடாஅந்த கா! வந்து பார் சற்றுஎன் கைக்கெட்டவே. நேரே ஒரு தடி எடுத்து, எமன் தலையில் அடிக்கிறது போல இந்தப் பாட்டைப் பாடுகிறார். இப்படி அறைகூவுவதால் என்ன பயன் என்று சிலருக்குத் தோற்றும். இப்படி வாயினால் பேசுவதற்கே ஒரு தைரியம் வேண்டும். அந்தத் தைரியத்தை அருணகிரிநாதர் பெற்றிருக்கிறார். எமனைப் பற்றி நினைந்து நினைந்து, சாம்பிச் சாம்பி, "ஐயோ செத்துப் 212