பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! தண்டமும் சூலமும் முருகன் தண்டத்தைத் தாங்கி நிற்கிறான். அவனைத் தந்த சிவபிரான் சூலபாணி. அவ்விருவரும் தாங்கும் தண்டத்தையும் சூலத்தையும் காலன் தாங்கி நிற்பதால் அடியவர்கள் அவனைக் கண்டு ஏமாறமாட்டார்கள். தண்டமும் சூலமும் யார் கையில் இருந்தாலும் சிறப்பை அடைவதில்லை. கத்தியை வைத்துக் கொண்டு காய்கறி நறுக்குகிறான் ஒருவன். அதே கத்தியைக் கொண்டு வேறொருவன் கசாப்புக் கடையில் ஆட்டை வெட்டு கிறான். இரண்டிடத்தும் கத்தி வேலை செய்தாலும் இரண்டு கத்தியும் ஒன்றாகுமா? ஒரே பெருமையைப் பெறுமா? இருக்கிற இடத்தைப் பொறுத்துத்தான் அதற்கு மதிப்பு ஏற்படுகிறது. தண்டமும் சூலமும் கடவுள் கையில் இருந்தால் மதிப்பு: யமன் கையில் இருந்தால் அது இல்லை. அதை அவன் தாங்குவதற்கே தகுதி இல்லாதவன். தண்டம் எடுத்தவன் எல்லாம் தண்டற்காரன் ஆகிவிட முடியாது? 'உன் கையில் உள்ள தண்டத்தையும், சூலத்தையும் கண்டு பயப்பட மாட்டேன். அவற்றைக் கண்டு உனக்கு மதிப்பும் கொடுக்க மாட்டேன். அந்தச் சூலத்தையும் தண்டத்தையும் வைத்துக் கொண்டு வந்தால் நான் உன்னைப் பார்த்து என்னுடைய பெருமானோ என எண்ணி மயங்கிவிடு வேன் என்று நினைக்கிறாயா?" என்று எண்ணிச் சொல்வதுபோல அருணகிரியார் சொல்கிறார். தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி என்று அவர் சொல்வதிலே அவருக்குத் தண்டத்திடமும், சூலத் திடமும் கோபம் இல்லை என்பதும் தெரிகிறது. அவற்றை யமன் எடுத்து வைத்துக் கொண்டால் அவை என்ன செய்யும்? எய்தவன் இருக்க அம்பை நோகலாமா? "என்ன இருந்தாலும் அவை எம் பெருமானை நினைப்பூட்டும் சின்னங்கள். உன்னை அழிப்பேனே தவிர, அவற்றை அழிக்க மாட்டேன். ஆகவே, உன் கையிலுள்ள சூலமும், தண்டமும் கீழே விழுமாறு செய்து உன்னைத் தாக்குவேன்' என்கிறார். எமன் தண்டத்தை உடையவன். தண்டதரன் என்ற பெயர் அவனுக்கு உண்டு. அவனுக்குச் சூலமும் ஆயுதம். 21了