பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகா வந்து பார்! 'கடவுள் மனத்தில் இருக்கிறார் என்கிறீர்களே, என் மனத்தில் இருக்கிறாரா? இருந்தால் எங்கே காட்டுங்கள் பார்ப்போம்" என்று சொல்கிறவர்கள் உண்டு. ஒரு சின்னக் குழந்தை தன் தாயிடம் போய், "இந்தப் பாலில் வெண்ணெய் இருக்கிறது என்றாயே! வெண்ணெயைக் காணோமே. எங்கே காட்டு, பார்ப்போம்” எனக் கேட்டால் அம்மா என்ன சொல்லுவாள்? 'என் அருமைக் குழந்தையே, பாலை இப்படியே வைத்துக் கொண்டு பார்த்தால் உனக்கு வெண்ணெய் தெரியாது. பாலின் ஒவ்வொரு துளியிலும் வெண்ணெய் இருக்கிறது. அதை இங்கே கொண்டு வா, காட்டுகிறேன்' என்று சொல்லிப் பாலை வாங்கிக் காய்ச்சி உறைகுத்தி, தயிராக்கி, வாங்கிக் கடைந்து வெண்ணெயை உருட்டி, அதன் கையில் கொடுப்பாள். அதைப்போல, “என் மனத்தில் இருக்கிற கடவுளைக் காட்டு, பார்ப்போம்" எனக் கேட்டுக் கொண்டு வருபவர்களை ஞான குருக்கள் அவர்களை விட்டே அன்பு என்னும் உறவுகோல் நட்டு, உணர்வு என்னும் கயிற்றைக் கொண்டு, வாங்கிக் கடையச் சொல்லி ஆண்டவனைக் காட்டுகிறார்கள். மூன்றாவது வகையினரான மக்கள் மணியைப் போன்றவர்கள். கொஞ்சம் பாசி படர்ந்திருக்கிற மணியைக் கடைந்தாலே ஒளி வீசுவதைப் போல, அந்த மக்கள் முன்னைப் பிறப்பில் கடுந்தவம் செய்து, யோகாப்பியாசங்கள் செய்து, ஆண்டவனைக் காண இடைவிடாது சாதனை செய்தவர்களாக இருப்பார்கள். பாயசத் திற்கு ஏலக்காய் தூள் பண்ணிப் போட மறந்துவிட்டதுபோல, குழம்புக்கு மாவு கரைத்து ஊற்றி இறக்கி வைக்க மறந்துவிட்டது போல, தலைவாரிப் பின்னிக் கொண்டு உடையெல்லாம் எடுத்துக் கட்டிக் கொண்டு அலங்காரம் பண்ணிக் கொண்டவள் நெற்றிக்குப் போட்டு வைத்துக் கொள்ள மறந்துவிட்டது போல, எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்துவிட்டு கல்யாணத்திலே தாலி கட்ட மறந்துவிட்டதைப் போல, இவர்கள் முந்திய பிறப்பில் எல்லாவிதமான காரியங்களையும் செய்துவிட்டு இறைவன் அருளைப் பெறுவதற்குள் மரித்திருப்பார்கள். அவர்களை யோகப் பிரஷ்டர்கள் என்று சொல்வார்கள். அவர்கள் இப்பிறப்பில் விட்ட குறை தொட்ட குறையாக மிக விரைவில் இறைவன் அருளைப் பெற்றுவிடுவது உண்டு. குழம்பு கொதிக்க நேரமாகுமே தவிர, 223