பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கொண்டே இருக்கிறது. குமரகுருபரன் சொன்ன மூல உபதேசமே இன்று பல கால்களாகப் பிரிந்து அருணகிரிநாதரைப் போன்ற நல்லோர்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கிறது. அவன் சொன்ன காலம் வேறு, சொன்ன இடம் வேறு என்று எண்ணாமல் அவனே குருநாதனாக இப்போதும் எழுந்தருளி வந்திருக்கிறான் என்று எண்ணுவதுதான் முறை. "அருபரத் தொருவன் அவனியில் வந்து குருபர னாகிய கொள்கையைச் சிறுமை என்று இகழாதே" என்பது திருவாசகம். எப்போதும் ஆண்டவனை நினைத்து வாழ்வதே குருநாதன் சொன்ன சீலம். இந்தச் சீலத்தை யார் அதுஷ்டிக்கிறார்களோ அவர்கள் சிவயோகிகள். குருநாதன் எனக்குச் சொன்ன என்று பொருள் செய்யாமல் யாவருக்கும் பயன்படும்படி சொன்ன என்று கொள்ள வேண்டும். இன்றும் குரு பரம்பரை இருக்கிறது. அவர்கள் சொல்கின்ற சீலத்தை யார் மெள்ளத் தெளிந்து அறி வார்களோ அவர்கள் காலத்தை வென்றிருப்பார். சீலம் என்பது ஒழுக்கம். வாக்கினாலும் உடம்பினாலும் செயலாலும் அவ்வவற்றுக் குரிய ஒழுக்க நெறியில் நிற்பவர்கள் காலத்தை வென்றிருப் பார்கள். மனிதன் வாழ்நாளில் நினைப்பினாலும், வாக்கினாலும், செயல்களினாலும் பூரண வாழ்வுக்கேற்ற வரன் முறையையறிந்து செயல் செய்து ஒழுக வேண்டும். அந்த ஒழுக்கத்தின் ஆதார சுருதியாக இறையுணர்ச்சி இருக்க வேண்டும். அந்த வகையில் ஈடுபடுகிறவனுக்குக் காலம் போவதே தெரியாது. காலத்தை வெல்லுதல் ஒருவன் தொழிற்சாலையில் வேலை செய்கிறான். காலையில் சங்கு ஊதியபோது உள்ளே நுழைகிறான். இயந்திரங்களின் நடுவில் தன்னை மறந்து வேலை செய்கின்ற அவன் பிற்பகல் ஒரு மணிக்குச் சங்கு பிடித்தவுடன்தான் தன் நினைவு பெற்று, 'மணி ஒன்றாகி விட்டதே! என நினைக்கிறான். ஐந்து மணி நேரம் தன்னை மறந்து வேலை செய்தான். நேரம் போனது அவனுக்குத் தெரியவில்லை. மற்றொருவன் வீட்டிலே காலைச் 248