பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 துறவிகளும் மங்கையர் விழி வலையிற் பட்டுத் தடுமாறுவதை விரிக்கிறது. "வள்ளிமணாளன் திருவருளால் நான் காம சமுத்திரத்தைக் கடந்தேன். (3) என்று ஒரு பாட்டில் அருணகிரியார் பாடுகிறார். வாழ்க்கையினிடையே காமனால் அச்சம் உண்டாகிறது. வாழ்க்கையின் முடிவில் காலனால் அச்சம் உண்டாகிறது. காமனை வெல்வது போலவே முருகன் அருள் இருந்தால் காலனையும் வென்று விடலாம் என்பதை அருணகிரிநாதர் பல இடங்களில் எடுத்துச் சொல்கிறார். இப் புத்தகத்தில் எடுத்து விளக்கும் முதற் பாடல் அந்தக் கால ஜயத்தையே பேசுகிறது. ஒலையும் தூதரும் கண்டு திண்டாடுவதைப் போக்கி முருகனுடைய திருவுருவம் முன் நிற்கிறதாம். அப்பெருமானுடைய உருவத்தியானம் செய்தால் இடருறும்போது அவ்வுருவம் முன்வந்து நின்று அதனைக் களையும் என்ற குறிப்பும் இப்பாடலில் இருக்கிறது. ஒரு பாட்டு, இந்த உடலாகிய சிறையிலே புகாத வண்ணம் திருவடியாகிய வீட்டைத் தந்தருள வேண்டுமென்று முருகனை வேண்டுவதாக இருக்கிறது (5). இறைவன் திருவடியே வீடாக இருக்கும் என்ற உண்மையை இப் பாடல் புலப்படுத்துகிறது. மற்றொரு பாட்டு (2), இறைவன் திருவருளால் பெறும் அநுபவத்தைப் பற்றிச் சொல்கிறது. அகண்டமாக இருக்கும் பரம்பொருளை உருவமாக வைத்து வழிபட்டுப் புகலடைந்து காதல் கொண்டால் அக்காதல் முறுகுமிடத்துப் பிறக்கும் இன்பம் இத்தகையதென்று பிறருக்கு உணர்த்தலாகாது என்று அருண கிரிநாதர் சொல்கிறார். 'முருகுப்பித்துப் பிடித்துப் போய் அந்த இன்பத்தை அநுபவித்துப் பார்க்க வேண்டுமேயன்றி எவ்வாறு புகல்வது?" என்று கேட்கிறார். இதில் உள்ள ஆறு பாடல்களில் ஒன்று மனத்தை முன்னிலைப் படுத்திச் சொல்லியது (4): இரண்டு முருகனை முன்னிலை 256