பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 'கருத்திலே அதை எப்படிப் பதித்துக் கொள்வது?" என்று அவன் கேட்டான்; பதில் வருகிறது. 'உலகத்தில் எத்தனையோ பொருள்களை நீ பார்க்கிறாய், அவை எல்லாம் உன் மனத்தில் நிற்பது இல்லையா? உனக்கு அழகான மனையாட்டி இருக்கிறாள்; அன்புள்ள குழந்தை இருக் கிறது. அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள். நீ தனிமையில் படுத்திருக்கிறாய். கண்ணை மூடிக்கொண்டு ஏதோ யோசிக்கிறாய். உன் அழகான மனைவி உன் கருத்திலே தோன்றுவது இல்லையா, உன் செல்லக் குழந்தை மார்பின் மீது தவழ்ந்து விளையாடுவது போல நினைந்து உடம்பு கிளுகிளுத்துப் போகிறாய் அல்லவா, அப்போது குழந்தை உன்னிடத்தில் இல்லாவிட்டாலும் மார்பின் மீது நீந்துவது போல நினைத்து இன்புறுகிறாயே! அது எப்படி? அவர்களுடைய உருவம் உன் உள்ளத்தில் எப்படிப் பதிந்தன): 'நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்; அதனால் பதிந்தன. 'அப்படியானால் நீ அடிக்கடி ஆண்டவன் கோயிலுக்குச் செல்லலாமே! அவன் அலங்காரத்தைப் பார்க்கலாமே! பார்த்தால் பதிவு ஏற்படாதா?” 'நான் அடிக்கடி போகிறேன்; அடிக்கடி பார்க்கிறேன். இருந்தும் பதிவு ஏற்படவில்லையே!” 'மனையாட்டியை அடிக்கடி பார்க்கிறேன், அதனாலே பதிவு ஏற்பட்டது என்று சொல்கிறாய். ஆண்டவனை அடிக்கடி பார்க் கிறேன், இருந்தும் பதிவு ஏற்படவில்லை என்கிறாய். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லவா? நீயே யோசித்துப் பார்.' விடை வரவில்லை. அவர் மேலும் விளக்குகிறார். 'மனை யாட்டியை அடிக்கடி பார்ப்பது இருக்கட்டும். ஒருவன் மணம் செய்து கொள்வதற்கு முன் பெண் பார்க்கச் சென்றான். தனக்கு மனையாட்டியாக வரப்போகும் அந்தப் பெண்ணை ஒருமுறை தான் பார்த்தான். இருந்தும் கல்யாணம் ஆகும் வரையில் கிட்டத் தட்ட இரண்டு மாதம் எப்போதும் அவளையே நினைத்துக் கொண் டிருந்தான்; அந்தப் பெண்ணின் உருவம் அவன் மனத்திலேயே பதிந்து நின்றது. இப்படி நிகழ்வது உண்டு அல்லவா?" 262