பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் வுடனே அச்சம்; எதிரே நிற்கின்ற தூதனைக் காணும்போது நடுக்கம்; இவற்றுடன் உயிர் ஊசலாடிக்கொண்டு வெளியே போகத் திண் டாடும். இந்தத் திண்டாட்ட வாதனையை ஒழிக்கலாம்.' ஒலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து என்று அருணகிரியார் சொன்னவுடனேயே, 'அது எப்படி சுவாமி? என் ஆயுள் முடிந்துவிட்டது என்பதை அறிவிக்கும் ஒலையையும், 'என்னுடனே வா' என அழைக்கின்ற யம தூதரையும் கண்டு, உடல் சோர்வு அடைய, கண் பஞ்சு அடைய, பயத்தினாலே திண்டாடுகின்ற நிலையை ஒழிக்க உண்மையிலே இயலுமா?" என்று கேட்கிறான். 3 படம் எழுதுததல் 'அப்பா முடியும். அதற்குப் படம் எழுதவேண்டும். எம்பெருமான் முருகனுடைய படத்தை எழுதவேண்டும். மனத்திரையில் எழுதிக்கொள்ள வேண்டும்." 'சுவாமி! நீங்கள் சொல்வது விளங்கவில்லை. மனத்திரையில் எப்படி எழுதுவது? ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரமும் நான் எம்பெருமான் திருவுருவத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாலும் நான் அவன் உருவத்தை மனத்திரையில் எழுதும் பாக்கியம் இல்லாதவன் ஆயிற்றே. அப்படி இருக்க, காலை எட்டு மணிக்குக் காரியாலயம் போனால் மாலை எட்டு மணிக்குத் தான் திரும்பி வருகிறேன். வீட்டில் தங்கும் சில மணி நேரம் தூக்கத்திலும், சாப்பாட்டுக்கு வேண்டிய பொருளை வாங்கி வரு வதிலுமே செலவாகி விடுகிறதே. எனக்கு எப்போதும் ஆண்டவனை நினைக்க நேரம் எங்கே?' என்று பரிதாபமாகக் கெஞ்சுகிறான் அன்பன். காலையும் மாலையும் "酪 இருபத்து நான்கு மணி நேரமும் ஆண்டவனை நினைக்க வேண்டாம். அவன் திருவுருவத்தை நினைப்பதற்கு இரண்டு போதுகள் இருக்கின்றன. அந்த இரண்டு போதும் 267