பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலையும் மாலையும் காக்கைக்குச் சோறு பெரும்பாலும் விலங்கினங்கள் உண்ணுவதும், உறங்குவது மாகத்தான் காலத்தைக் கழிக்கின்றன. அவை இறக்கும்பொழுது என்ன நினைவோடு இறக்கின்றனவோ அதற்கு ஏற்ற பிறவியை எடுக்கும். விலங்கு சாகும்போது மனிதனை நினைத்தால் அடுத்த பிறவியில் அது மனிதனாகப் பிறக்கும். இந்த நாட்டில் உண்பதற்குமுன் காக்கைக்குச் சோறிடுவது வழக்கம். அதில் இரண்டு பயன் உண்டு. ஒன்று நம்மைப் பாது காப்பது; மற்றொன்று காக்கையைப் பாதுகாப்பது. காக்கை கா கா என்று தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் தன்மையைக் கண்டு நாமும் நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து உண்ணக் கற்கிறோம். சோறு முதலானவற்றில் நஞ்சு கலந்திருந்தால் அதை உண்ணும்போது காகம் மயங்கி விழுந்துவிடும். அதைக் கண்டு நாம் அந்த உணவை உட்கொள்ளக் கூடாது என்று அறிந்து கொள்ளலாம். உண்டுகாட்டி முற்காலங்களில் பெரிய அரசன். உணவை அருந்துவதற்கு முன்பு உண்டு பார்க்கும் சிலர் இருப்பார்கள். அதில் யாராவது பகைவன் நஞ்சைக் கலந்து வைத்திருக்கப் போகிறானே என்ற எண்ணத்தால் அந்த வழக்கம் இருந்தது. அரசன் உண்பதற்கு முன் உணவின் இயல்பைத் தெரிந்துகொள்ள உண்பவர்களை 'உண்டு காட்டிகள்' என்பர். கண்ணப்ப நாயனார் முதலில் தாம் உண்டு, மிக்க சுவையுள்ளவற்றைக் காளத்தியப்பனுக்குக் கொடுத்தாராம். ஆண்டவனுக்குக் கண்ணப்பர் உண்டுகாட்டியாக இருந்தார் என்று சொல்லலாம். பெரியவர்களுக்கு ஒன்றை அளிப்பதற்கு முன்பாக அது நல்லதா, தீங்கு இல்லாததா என்பதை அன்புடையவர்கள் பரீட்சை செய்து பார்த்துவிட்டு அளிப்பதுண்டு. ஒரு குருநாதரிடத்தில் பல மாணவர்கள் இருந்தார்கள். ஒருநாள் அவரிடம் வந்து, 'சுவாமி! தாங்கள் உறங்க வேண்டிய படுக்கையைப் போட்டுவிட்டு, அதிலே உங்கள் சிஷ்யன் ஒருவன் தினமும் படுத்துப் புரளுகிறான். அவன் உங்கள்பால் அன்பு உடையவன் என்று சொல்லிக் கொள்கிறீர்களே” 271