பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 இறைவனை நினைந்து நினைந்து அவன் திருவுருவத்தை மனத் திலே தீட்டிக் கொள்ள வேண்டும். அதன் பயனாக விடியற் காலையில் எழுந்திருக்கும்போது இறைவன் நினைவு வரும், இரவு எதைப்பற்றி நினைத்துக்கொண்டு உறங்குகிறதோ அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு எழுந்திருப்பது மனத்தின் இயல்பு. "தொழுது எழுவார் வினைவளம் நீறெழ நீறணியம்பலவன்" என்று மாணிக்கவாசர் திருக்கோவையாரில் பாடியிருக்கிறார். படுக்கும்போது இறைவனைத் தொழுது படுப்பவர்களாதலின் விடிந்தவுடன் எழும்போது நினைப்பு வந்து தொழுகிறார்கள். இது இறைவனுடைய அடியார்களுக்கு இயல்பு. இறைவனுடைய நினைவு அவர்களுக்குக் காலையும் மாலையும் முன்னிற்கிறது. இதேபோலத்தான் இறக்கும்பொழுது ஆண்டவனை நினைந்து தொழுதுகொண்டே இறப்பவர்கள் பிறக்கும் பொழுது ஆண்ட வனையே நினைந்து தொழும் இயல்போடு பிறக்கிறார்கள். பிறந்த வுடன் திடீரென்று ஒருவனுக்கு ஞானம் வந்துவிடாது. 'கல்யாணம் கூட ஆகவில்லை. முருகா முருகா என்று அவன் சாமியாராகப் போய்விட்டானே!" என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ரமண பகவான் சிறு வயசிலேயே திருவண்ணா மலை வந்து விட்டார். ஒரு நாளைக்கும் மற்றொரு நாளைக்கும் எப்படித் தொடர்பு இருக்கிறதோ, அதேபோலத்தான் ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்கும் இணைப்பு இருக்கிறது. முதல் நாள் இரவு ஒருவன் படுக்கும்பொழுது எந்த நினைவுடன் படுக்கிறானோ, அதுவே மறுநாள் காலையில் தெளிவாகத் தோன்றுகிறது. இந்தப் பழக்கம் உறுதிப்பட்டால், வாழ்விலே எத்தனை விதமான காரியத்தைச் செய்தாலும் இறக்கும்பொழுது இறைவனது நினைவு முன்வந்து நிற்கும். இறக்கும்போது உள்ள நினைவே மறுபிறப்புக்குக் காரணமாகிறது என்பார்கள். சிற்றின்பங்களை நுகரவில்லையே என்ற நினைவோடே இறந்தால் மீண்டும் பிறந்து அந்த இன்பங் களை நுகர வேண்டி வரும். இறைவன் அடியைத் தொழ வேண்டும் என்ற இறுதி நினைவோடு இறந்தால் அதற்குத் தக்க பிறவியே கிடைக்கும். மனிதனுக்கு மட்டும் இந்த நியதி என்ப தன்று; விலங்கினங்களுக்கும் இது பொருந்தும். 27Ο