பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கைக் கூத்து களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், நாம் பாசமாகிற கயிற்றி னால் பொறிகளோடு கட்டப்பட்ட மனத்தை உடையவர்கள். அவர்கள் அந்தக் கயிற்றை ஞானமாகிற கத்தியினால் அறுத்து விட்டவர்கள். ஆகவே அவர்கள் இருதயத்தில் இருக்கிற இறை வனோடு எப்போதும் ஒன்றுபட்டு ஞானமயமாக இருக்கிறார்கள். அவர்கள் செய்கிற காரியங்கள் அத்தனையும் ஞானத்தின் விளை வாகவே அமையும். நாமோ பாசமாகிற கயிற்றை அறுக்கும் ஞானம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நம்மை ஐந்து பொறிகளாகிய பேர்வழிகள் ஆட்டிக்கொண்டே இருக்கிறார்கள். நாம் சுற்றிச் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்கிறோம். அப்படிச் சுழல்வதனால் நமக்கு ஏதாவது இன்பம் உண்டா? இல்லை. துன்பத்தைத்தான் கண்டோம். ஐந்து பொறிகளையும் நமக்கு அடிமையாக்க முடியாமல் நாம் அவற்றுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறோம். நம் மனம் அவற்றுக்கு அடிமைப்பட்டு நம்மையும் தன்னோடு இழுத்தடிக்கிறது. அதனால் விளைவது துன்பம். பொறியால் விளையும் துன்பம் பொறிகளின் வசம் அகப்பட்டுப் படுகின்ற துன்பமே பல ருடைய உயிரை மாய்க்கிறது. விட்டில் பூச்சி எரிந்து கொண்டிருக் கிற விளக்கைக் கண்ணால் பார்க்கிறது. கட்பொறிக்கு அடிமைப் பட்ட அது, அதனைப் பழம் என்று நினைத்துக் கொண்டு போய் அதில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறது. பழமா இல்லையா என்று பார்க்கிற ஆற்றல் இல்லாமையினால் கட்பொறிக்கு அடிமைப்பட்டு உயிரையே விடுகிறது. அசுணம் என்பது ஒரு பறவை. அதன் காது மிக நுட்பமானது. வீணை வாசித்தால் ஓடி வரும். பறையைக் கேட்டால் இறந்து விடும். "யாழ் நறையடுத்த அசுணநன் மாச்செவி பறை அடித்தது போலும்" என்று இந்தச் செய்தியைக் கம்பர் உவமையாக ஆளுகிறார். இந்த அசுணப் பறவையைப் பிடிப்பதற்கு வேடர்கள் ஒரு தந்திரம் செய்வார்கள். முதலில் வீணையை வாசிப்பார்கள். iணா கானத்தைக் கேட்ட அந்தப் பறவை வந்து நிற்கும். உடனே 19