பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் புணையும் அதுவும் அன்றி, பின்னாலே வருகின்ற பிறவிகளுக்குக் காரண மான எண்ணங்களைக் கொண்டிருப்பதால் மனம் நோயுடையது என்று சொல்கிறார்கள். உடம்புக்கு வருகின்ற ஒவ்வொரு நோய்க்கும் பெயர் இருப்பதைப் போலவே மனத்திலே உண்டா கின்ற வியாதி எல்லாவற்றையும் தொகுத்து ஆறாகப் பிரித்தார்கள். உடம்பில் வருகின்ற நோய்களுக்குப் பல பெயர்கள் இருந்தாலும் வாதம், கபம், பித்தம் என்று மூன்றினாலே வருபவை என்று நம் நாட்டு வைத்தியர்கள் சொல்கிறார்கள். அது போலவே மனத் திற்கு வருகின்ற நோய்கள் ஆறு. அறு பகை என்று தமிழிலும், அரிஷட் வர்க்கம் என்று வடமொழியிலும் அவற்றைச் சொல் வார்கள். இவை மனத்தின் உள்ளே பற்றுகின்ற நோய்; எக்ஸ்ரேக்கும் தெரியாமல் அறுவை மருத்துவத்தால் மாற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே புரையோடுகின்ற நோய். இருதய வியாதி என்று ஒருவகை நோய் உண்டு. இந்த நோய் கள் அந்த இனத்தைச் சேர்ந்தவை அல்ல. நுண் பொருளாகிய மனத்தில் படரும் நோய்கள் இவை. வெளியில் இருக்கும் நோய் எல்லோருக்கும் தெரியும். உள்ளே இருக்கும் நோய் யாருக்குமே தெரியாது. அதை உள்ளபடி தெரிந்துகொள்ளக் கூடியவன் உள்ளுக்குள் இருக்கிற ஆண்டவன் ஒருவன்தான். அந்த நோய் ஆறு காரணங்களால் வருவன. அவை காமக் குரோத லோப மோக மத மாச்சரியம் எனச் சொல்வர் பெரியோர். ஆறிலும் முதலில் காமத்தை வைத்தார்கள். அதுதான் பெரிய வியாதி. பெரும்பாலோரைப் பற்றியிருக்கும் பிணி. காம மென்னும் நோய் காமம் என்பதற்கு ஆசை என்று பொருள். இது மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை ஆகிய மூன்றுக்கும் பொதுவானது என்றாலும் வாழ்க்கையில் மிகப் பெரிய ஆசையாகப் பெண்ணாசை இருப்பதனால் அதற்கே காமம் என்ற பெயர் வழக்கில் வந்து விட்டது. அந்த ஆசைதான் மனிதர்களுக்கு உண்டாகின்ற பெரிய நோய். இன்றைக்குத்தான் உலகத்தில் அப்படி வந்திருக்கிறது என்று சொல்லலாமா? எல்லாக் காலத்திலும் அப்படியே இருந்து வருகிறது. பெரிய பெரிய சண்டைகளுக்கு மூல காரணம் காமம். ராம ராவண யுத்தத்துக்கு அடி அதுதான். ராமன் அயோத்தியில் 3O3