பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்வதும் சொல்ல வேண்டுவதும் செய்யவில்லை. பதம் பஞ்சு என்று கூறாமல், மென்மைக்கு இருப்பிட மாகிய மயிலைக் கூறலாம்; அப்படியும் நீ செய்திலை. கண் சேல் என்னாமல், வேல் என்று கூற வாய்ப்பு உண்டு; அப்படியும் செய்திலை. இவ்வாறு எதிர் நிரனிறையாகக் கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும். மாயூரம் - மயில். மயூரம் என்பது இங்கே மாயூரம் என நின்றது: "கேயூர வாகும் கிரிதனையும் மானும் ஒரு, மாயூரம் நீங்காத வாமமும்' (திருவானைக்காவுலா, 233) என்று பிறரும் ஆள்வர். வெட்சியும் தண்டையும் அணிந்த கால். காண்பது - நுகர்வது.) 341