பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்றடி பட்ட இடம் - 'மூன்றடி மண் தா என்று கேட்டார். உலகத்தோருக்கு எல்லாப் பொருளையும் கொடுக்கும் வள்ளலாகிய திருமால், எல்லாப் பொருள்களையும் தம்மிடத்திலேயே வைத்துக் கொண்டிருப் பவராக இருந்தாலும், மகாபலியிடம் அவர் கேட்டது யாசகந் தானே? இல்லாதவன் கேட்பது இயற்கை. அவன்கூடக் கேட்கக் கூடாது என்று பெரியோர் கூறுவர். மகாபலியின் இயல்பு வாமனராக வந்து யாசித்த போது மகாபலி என்ன நினைத் தான்? அவன் ஞானம் உடையவன் அல்லவே! ஞானம் உடைய வனாக இருந்தால் தருகிறேன் என்று சொல்வானா? 'நான் தருவதற்கு என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் எனக்குத் தந்தவன் நீதானே? என்னிடம் நீ கொடுத்திருப்பனவற்றை எல்லாம் நீயே வாங்கிப் போக வந்திருக்கிறாய். எடுத்துக் கொண்டு போ' என்று சொல்லி அவன் காலைப் பிடித்துக் கொண்டிருக்க மாட்டானா? மகாத்மா காந்தி அடிகள் ஒரு கருத்தை அடிக்கடி சொல்வார். பணக்காரர்கள் எல்லாம் தர்மகர்த்தா மாதிரி இருக்க வேண்டும். ஆண்டவன் திருவருளால் தாம் பெற்ற பணத்தைப் பிறருக்கும் கொடுத்துப் பகிர்ந்து உண்ண வேண்டும். 'அப்படிப் பணக்காரர் கள் இருந்தால் தொழிலாளி, முதலாளியிடையே சண்டையே வராது' என்று பலமுறை அவர் சொல்லி இருக்கிறார். மகாபலி ஞானம் உடையவனாக இருந்தால், "ஆண்டவனே, முன்னாலே கொடுத்த பொருளை உரிமையோடு கேட்பதற்கு வந்திருக்கிற நீ எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போகலாம்' எனச் சொல்லி அவன் காலைப் பற்றிக் கொண்டிருப்பான். அவன் அரக்க சாதியினன். ஆகவே தன்னிடம் யாசகத்திற்கு வந்திருப்பவனுக்குத் தான் ஏதோ கொடுப்பதுபோல எண்ணிக் கொண்டு, “தருகிறேன்" எனச் சொல்லி, கையில் நீர் வார்க்கக் கிண்டியை எடுத்தான். உலகத்தில் முற்றும் பொல்லாதவர்களும் இல்லை; நல்லவர் களும் இல்லை. பொல்லாதவர்களிடத்தும் சில நல்ல குணங்கள் இருக்கும். ஒருவன் ஒழுக்கம் தவறியவனாக இருப்பான். ஆனால் யார் கேட்டாலும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பு 33