பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 கடலுக்குள் போட்டுவிட்டார். எந்தத் துவாரத்தின் வழியே அமுதம் ஒழுகிப் போய்விடும் என்று அஞ்சினாரோ, அந்தத் துவாரத்தின் வழியே அமுதம் உள்ளே புகுந்து குடத்தை நிரப்பிற்று. முன்னே இருந்த துவாரம் அடைபட்டு விடவில்லை. ஆனால் அமுதம் அதன் வழியாகவே குடத்திற்குள் நிரம்பிவிட்டது. குடமும் அமுதக் கடலுக்குள்ளேயே கிடக்கிறது. ஒட்டைகளை அடைக்கா மல் குடம் நிரம்பிவிட்டது எவ்வளவு வியப்பு "சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன் கண்இணைநின் திருப்பாதப் போதுக்கு ஆக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குஉன் மணிவார்த்தைக்கு ஆக்கிஐம் புலன்கள் ஆர வந்தனை.ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மால்.அமுதப் பெருங்கடலே! மலையே! நின்னைத் தந்தனை, செந் தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே! இரண்டுமில்இத் தனியே னேற்கே! என்பது திருவாசகம். 'இதைப் போல நீங்கள் செய்ய வேண்டும்' என்கிறார் அருண கிரிநாதர். தன் இச்சைப்படி ஒடுகின்ற மனத்தை நிறுத்த முடியாது. அது ஒடுகின்ற வேகத்திற்கு அங்கங்கே முட்டுக் கட்டை போட்டு, மடை மாற்றிவிட வேண்டும். ஒடுகின்ற மனத்தை அங்கங்கே தடுக்க வேண்டும். தடுப்பதாவது அதன் போக்கைத் திருப்பி ஓடவிடுவது. - வெகுளியை விடுதல் இதனால் என்ன ஆகும்? அப்போதைக்கு மனம் கொஞ்சம் வசப்பட்டது போலாகும். ஆனால் தன் இச்சைப்படி போக முடியாத காரணத்தினால் கோபம் உண்டாகும். நம்மை நாமே கோபித்துக் கொள்வோம். மற்றவர்களை அடித்துப் பழகின கை, அடிக்க ஆள் அகப்படாவிட்டால் தன்னையே அடித்துக் கொள்ளும் வெறிபிடித்த நாய், கடிப்பதற்கு வேறு எதுவும் அகப்படாவிட்டால் தன்னைத் தானே கடித்துக் கொள்ளும். அது இயற்கை. பொறி களின் செய்கை தடுக்கப்படவில்லை என்றாலும், மடை மாற்றப் பட்டுவிட்டதல்லவா? அதனால் உள்ளே கோபம் கொந்தளிக்கும். "அந்தக் கோபத்தை அழி' என்கிறார் அருணகிரியார். - 56