பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தபடி இருங்கள் தடையாயிருக்கும் மேட்டையும் புதரையும் நீக்கினால், நீர் தானே பாயும். இது போலவே அருணகிரியார் ஆண்டவன் அருள் நீர் பாய வழி சொல்கிறார். "இந்த மேட்டையெல்லாம் வெட்டிவிட்டுச் சும்மா இரு. அது தானே பாயும், பார் என்கிறார். கிணற்று நீர் பூமிக்குக் கீழே தண்ணீர் இருக்கிறது. அது தானே வெளிப் படும்படி செய்யலாம். நல்ல கூர்மையான ஆயுதங்களால், தண்ணீர் வெளிப்படத் தடையாக இருக்கிற மண்ணைத் தோண்டினால் தண்ணீர் குபுகுபு என்று வெளிப்படுகிறது. அது வெளிப்படுவதற்குத் தடையாக இருந்தது மண். அது தன்னைக் காட்டி, தன்னுள் இருக்கும் தண்ணீரை மறைத்துக் கொண்டிருக்கிறது. அதை அகற்றிவிட்டால் அந்தப் பூமியில் இருந்தே தண்ணீர் வெளிப்படு கிறது. அதைப் போல நம்முள் இறைவன் இருந்தாலும் அருள் வெளிப்படுவதற்குத் தடையாகச் சில இயல்புகள் இருக்கின்றன. விளக்கை மறைத்துக் கொண்டிருக்கும் மரக்காலைப் போல, தண்ணிர் வெளிக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டிருக்கும் மண்ணைப் போல அவை இருக்கின்றன. அவற்றை ஒழித்துவிட்டால், இறைவன் அருள் தானே வெளிப்படும். காமம், வெகுளி, உலகத்துப் பொருளை உண்மையாகக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டிருக்கும் மயக்கம் ஆகிய மூன்றையும் நாம் ஒழித்துவிட்டால் அருளே மயமாக இருக்கிற ஆண்டவன் வெளிப்படுவான். சிற்பி செய்யும் தொண்டு ஒரு பெரிய பாறாங்கல்லைக் கொண்டு வந்து கோயிலுக்கு எதிரே போட்டிருக்கிறார்கள். அந்தக் கல்லை நாம் பார்க்கிறோம். அதே கல்லை ஒரு சிற்பியும் பார்க்கிறான். நாம் கல்லைத்தான் பார்க்கிறோம். அவன் கல்லையும் பார்க்கிறான்; அதற்குள் இருக்கிற முருகனது வடிவத்தையும் பார்க்கிறான். ஆனால் நமக்கு முருகனது வடிவம் தெரியவில்லை. சிற்பி அந்த முருகனது வடிவம் நமக்குத் தெரியாதபடி மறைத்திருக்கின்ற பகுதிகள் எல்லாவற்றையும் தன்னுடைய உளியால் செதுக்கிச் செதுக்கித் 63