பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-2.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 2 தெரியாது ஒரு பூதர்க்குமே. "ஒருயிருக்கும் தெரியாமல் யாரும் காணமுடியாத நிலைமை யில், அல்லும் பகலும் அற்ற வெளியாக இருக்கிற, சூது அற்ற நிலைக்குப் போதாய்' எனச் சொல்கிறார். அங்கே போவதற்கும் வேலாயுதன் துணையாக இருப்பான். அங்கே போன பிறகும் துணையாக எப்பொழுதும் இருப்பான். இங்கே இருந்தால் ஒரு கணம்கூடச் சும்மா இருக்க முடிவ தில்லை. எந்தச் சமயத்தில் யார் நம்மிடம் இருக்கும் செல்வத்தைப் பறித்துப் போய்விடுவார்களோ எனப் பயந்து பயந்து ஒடி ஒளிய வேண்டியிருக்கிறது. ஒரு கணம்கூடத் தூக்கம் வருவதில்லை. எப்போதும் வேலை. பகலும் வேலை; இரவும் வேலை. பகலும், இரவும் இல்லா இடத்தில் வேலையே இராது. சும்மா இருத்தல் சும்மா இருக்கப் போதாய். சும்மா இருப்பது என்பது என்ன? செயல் அடங்கி, பேச்சு அடங்கி, மனம் அடங்கி இருப்பதையே சும்மாயிருத்தால் என்பர். இந்த மூன்றையும் காஷ்ட மெளனம், வாங் மெளனம், மனோ மெளனம் என்று சொல்வர். அநுபவமும் ஆராய்ச்சியும் இறைவனுடைய அருளைத் தேடிச் செல்கிறவர்கள் அதைப் பெறுவதற்கு என்ன என்னவோ முயற்சி செய்கிறார்கள். அதை அடைந்த மாத்திரத்தில் சொல் அடங்கி, செயல் அடங்கி, மனம் அடங்கிச் சிதாகாசப் பொருளோடு ஒன்றுபட்டுச் சும்மா இருக் கிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் பேசியிருக்கலாம். ஆனால் அநுபவத்தில் ஈடுபடும்போது எல்லாம் அடங்கிவிடும். இரண்டு பேர், எங்கே உயர்ந்த நல்ல சாதி மாம்பழம் கிடைக்கும் எனத் தேடிப் போனார்கள். ஒரு மாந்தோட்டத்திற்குள் வந்தார் கள். ஒருவன் தனக்குக் கிடைத்த மாம்பழத்தை கையில் வைத்துக் கொண்டு, "இந்தப் பழம் எப்படி வந்தது? இந்த மாமரத்திற்கு வயசு என்ன? இந்தச் செடி எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப் 80