பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'வேல் மறவேன் மட்டும் வந்து முஸ்லிம்கள் தொழு கிறார்கள். நான் அந்தத் தலத்திற்குச் சென்றிருந்தபோது அங்கே தொழுகை நடத்திக் கொண்டிருந்த ஒரு முஸ்லிமைக் கண்டு பேசினேன். முஸ்லிம்களும் முருகனும் முஸ்லிம்கள் முருகனைத் தொழுகின்ற தலங்கள் சில இருக்கின்றன. பழனியில் முருகப்பெருமானைப் பின் பகுதி வழி யாக வந்து முஸ்லிம்கள் வணங்குகிறார்கள். திருப்பரங் குன்றத் தின் அடிவாரத்தில் நாம் தொழும் கந்தப்பெருமான் எழுந்தருளி யிருக்கிறார். மலை மேலே முஸ்லிம்கள் தொழும் சிக்கந்தர் எழுந்தருளியிருக்கிறார். சில நண்பர்கள் சிக்கந்தர் என்ற சொல் பூரீஸ்கந்தர் என்ற சொல்லின் திரிபு என்று சொல்வது உண்டு. கதிர்காமத்தில் இன்றும் முருகப்பெருமான் கோயிலுக்குப் பின் னால் இஸ்லாமியர்கள் வந்து தொழுகிறார்கள். இப்படி இஸ்லாமியருக்கும் முருகப்பெருமானுக்கும் தமிழ் வழங்கும் நிலத்தில் ஒரு வகையான தொடர்பு இருப்பதை நாம் உணர்கிறோம். எனக்குத் தெரிந்த சில முஸ்லிம் நண்பர்கள் முருகப் பெருமானை உபாசனை செய்கிறார்கள். திருவையாற்றில் உள்ள முஸ்லிம் கவிஞர் ஒருவர் முருகன் மேல் பல அழகான சந்தக் கவிகளை இயற்றியிருக்கிறார். ராவுத்தர் என்ற பட்டம் ராவுத்தன் என்று முருகப் பெருமானை அருணகிரியார் இங்கே விளித்த வகை இந்த நினைப்புக்களை உண்டாக்கியது. குதிரை வீரர்களாக இருப்பவர்களை ரவுத், ராவுத்தர் என்று கூறுவது மரபு. ராணுவத்தில் குதிரை வீரர்களாக இருந்து ஊழியம் செய்தவர்களுக்கு ரவுத், ராவுத் என்ற பட்டங்களை அரசன் வழங்கியது உண்டு. சில தலங்களில் சிவபெருமானுக்கு ராவுத் தேசுவரர் என்ற திருநாமம் இருப்பதைச் சிலாசாஸனங்கள் மூல மாக உணரலாம். முருகப் பெருமான் மயிலாகிய குதிரையின்மேல் ஏறி வந்து போரில் சூரனை அழித்தமையினால் ராவுத்தன் என்ற பட்டப் பெயரைப் பெற்றான். 'இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும்” මුං5