பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் நல்ல பொருள் ஒன்று தூணாக இருந்தால்தான் அமிருதத்தின் சுவை கெட்டுப் போகாது. அமிருத மயமாக இருக்கிறவன் சந்திரன். ஆகவே சந்திரனே அதற்கு ஏற்ற தூண் என்று தேவர்கள் முடிவு செய்தார்கள். மத்தைச் சுற்றிக் கடைவதற்குக் கயிறு வேண்டும். நெளிவு சுளுவாக இருக்கக் கூடியதையே தேர்ந் தெடுக்க வேண்டும்; அது மந்தர மலையைச் சுற்றக் கூடியதாக வும் இருக்க வேண்டும். ஆகவே அதற்கு வாசுகி என்னும் பாம்பே சரியானது என்று முடிவு செய்தார்கள். மந்தரத்தை மத்தாகக் கொண்டு, சந்திரனைத் தூணாக வைத்து, வாசுகியைக் கயிறாக்கி, தேவர்கள் பாற்கடலைக் கடைந்தார்கள். கடையும்போது சட்டி சாயாமல் இருக்க வேண்டும். இங்கே பாற் கடலை அடைகல்லாகத் தாங்க வைகுண்டவாசியே கூர்மமாக உரு எடுத்தார். கடையும்போது தேவர்கள் கை சலித்துப் போய் விட்டது. திருமால் ஒரு கை கொடுத்தார். போதாததற்கு ஆலகால நஞ்சு வேறு எழுந்து விட்டது. தேவர்கள் இறைவனை முதலில் மதிக்காவிட்டாலும், "பரமேசுவரா, இதை நீ சாப்பிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்று இப்போது போய்ச் சரணாகதி அடைந்தார்கள். பெருங்கருணை வடிவான பரமேசுவரன் நஞ்சை உண்டு அவர்களுக்கு வாழ்வு அளித்தான். மறுபடியும் அவர்கள் கடைந்தார்கள். அமிருதம் வந்தது. உடனே, "எனக்கு உனக்கு” என்று தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை மூண்டு விட்டது. திருமாலே அப்போதும் மோகினி உருவம் எடுத்துக் கொண்டு வந்து அமிருதம் பரிமாறினார். தேவர்களை ஒரு பக்கமாகவும், அசுரர்களை ஒரு பக்கமாகவும் உட்கார வைத்துத் தேவர்களின் வரிசையில் முதலில் படைக்க ஆரம்பித்தார். அசுரர்கள் அமிருதத்தை மறந்து மோகினியின் அழகிலே சொக்கிப் போனார்கள். அமிர்தம் முழுவதையும் தேவர்களுக்கு வழங்கி மறைந்தாள் மோகினி. - திருமாலின் உதவி தேவர்கள் அமிருதத்தை உண்பதற்கு மூலகாரணமாக இருந்தவர் திருமால். இதை இந்துக்களாகிய நாம் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சிலப்பதிகாரத்தில் சைனராகிய இளங்கோவடிகள் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 3.Gleft. HI-10 135