பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் ஏறிய மாணிக்கம் கின்ற மரணத்தையும் நீக்கும் சக்தி உடையது. இதைச் சாப்பிட மனிதன் எப்படி இருப்பான்? சாவாமல் இருப்பான். பிறக்காதவன் சாக முடியாது; பிறந்தவன் சாகத்தான் வேண்டும். பிறப்பையே நீக்கும் அமிருதத்தை முருகன் வழங்குகிறான். பிறப்பு நம் முடைய தீய வினையினால் வருவது. வினை ஒரு நிலையில் கட்டுப்படாமல் திரிகின்ற மனத்தினால் விளைவது. ஒரு நிலைப் படாமல் திரிகின்ற மனத்தைக் கட்டுப்படுத்தியவன் மிகப் பெரியவன். 'நிலையில் திரியா தடங்கியான் றோற்றம் மலையினும் மாணப் பெரிது’ என்கிறார் வள்ளுவர். மலை கொஞ்சங்கூட அசையாமல் இருக் கிறது. அதைக் காட்டிலும் பெருமை உடையவன், ஆண்டவன் திருவருள் ஒன்றையே பற்றிக்கொண்டு மனம் ஆடாமல் ஓடாமல் அசங்காமல் இருக்கும் இயல்பைப் பெற்றவன். மனம் நிலைபெறுதல் நின்ற இடத்திலேயே நிலைத்து இருக்கும் ஒன்று ஆடாமல் அசங்காமல் இருக்கிறது என்பது ஆச்சரியமா? ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஓர் இடத்தில் வைத்து விட்டால் நீர் அப்படியே அசங்காமல் இருக்கிறது. ஒருவன் தன் தலையில் நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒடுகிறான். அந்தப் பாத்திரத் திலுள்ள நீர் அப்போது அசங்காமல் இருந்தால் அதுதான் ஆச்சரியம் அல்லவா? அப்படி ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் மலை சலிக்காமல் இருப்பதில் பெருமை என்ன? மற்ற மற்ற மக்களைப் போலவே ஒருவன் தினப்படி வேலை செய்கிறான்; மனைவி மக்களோடு வாழ்கிறான்; சாப்பிடுகிறான். ஆனால் அவன் உள்ளம் மலையைப்போலவே நிலைத்து இருக்குமானால் அவன் மலையையும்விடப் பெருமை உடையவன் அல்லவா? அப்படி மலைபோல் நிலைத்து இருக்கும் மனம் இல்லாமல் எத்தனை மக்கள் திரிகிறார்கள் திரியாமல் வீட்டில் ஒரே இடத்தில்தான் உட்கார்ந்திருக்கிறான் என்று வைத்துக் கொள் வோம். அப்போது அவன் உடம்பு திரியவில்லை. ஆனால் அவன் உள்ளம் அலைகிற அலைச்சலுக்கு முடிவே இல்லை. நோய் 137