பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழிந்த எழுத்து மனம் நெகிழ்ந்து, அவன் திருவடி மிக அதிகமாக நடமாடுகிற அடியார்களின் கூட்டத்திலே தலை வணங்கிக் கிடந்தால் நமக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

  • சேல்பட்டு அழிந்தது செந்தூர்

வயற்பொழில்; தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடி யார்மனம்; மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்; அவன் கால்பட்டு அழிந்தது.இங்கு என்தலை மேல்அயன் கையெழுத்தே. (திருச்செந்தூரில் வயலை அடுத்த வளர்ந்த சோலை அந்த வயலில் வளர்ந்த சேல்கள் பட்டு அழிந்தது; தேன் நிரம்பிய கடம்ப மலர் மாலையின்மேல் ஆசை உண்டாகிப் பூங்கொடி போன்ற மகளிர் மனம் அழிந்தது; பெரிய மயிலையுடைய முருகனுடைய வேல்பட்டுக் கடலும் சூரனும் மலையும் அழிந்தன. அப்பெருமானுடைய திருவடி பட்டு இங்கே எளியேன் தலையின் மேல் பிரமன் கையால் எழுதிய எழுத்து அழிந்துவிட்டது. தேங்கடம்பு - தேன் நிரம்பி கடம்ப மலர் மாலை; இது முருகன் திருமார்பில் அணிந்தது. மால் - ஆசை. வேலை - கடல்; சூரன் ஒளிந்திருந்த கடல். வெற்பு - கிரவுஞ்சமலை. வேல்பட்டு அழிந்தது; அழிந்தது: தொகுதி ஒருமை. அயன் - பிரமன்.) i83