பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறமும் இன்பமும் அறத்தைப் பற்றிக்கொண்டு அதனோடு நிழல்போல வருகின்ற இன்பத்தை நுகர்ந்து அதனால் வீடு அடைவதற்குரிய வழியில் நின்று வாழ்கின்ற வாழ்க்கை சிறந்த இல்வாழ்க்கை ஆகும். அந்த வாழ்க்கையில் மயக்கம் இல்லை; தெளிவு பிறக்கும். அப்போதைக்கப்போது கிடைக்கிற இன்பத்தோடு அறத்தினால் வருகின்ற பயனும் அந்த அறம் மேன்மேலும் வளர்ச்சிபெற்று வருவதற்கு உரிய பரம்பரை வளர்ச்சி ஆகிய மகப்பேறும் கிடைக்கும். இவற்றையெல்லாம் மறந்து வெறும் இன்பத்திற்கு மாத்திரம் மங்கையர்கள் இருக்கிறார்கள் என்று நினைப்பதைப் போன்ற பேதைமை வேறு இல்லை. பரம்பரையின் இயல்வு ஒரு மனிதனுடைய மனப் பண்பை அவனுடைய குழந்தை களின் இயல்பு காட்டும் என்கிறார் திருவள்ளுவர். 'தக்கார் தகவிலர் என்பதவரவர் எச்சத்தால் காணப் படும்.' ஒருவர் நாள்தொறும் கோயிலுக்குப் போய் ஆண்டவனுக்குப் பூசை செய்து வருகிறார். அவருக்குப் பிறக்கும் குழந்தை கடவுளே இல்லை என்று சொல்லித் திரிகிறான். இது ஏன் என்றால் கோயிலுக்கு அவர் உடம்பு சென்றது. உள்ளத்தில் வேறு ஏதோ நினைவு அவருக்கு இருந்திருக்கிறது. அதன் விளைவு இப்படி ஆயிற்று. அந்த உடம்பில் இராதது இந்த உடம்பில் வருகிறது. உள்ளத்தால் வாழ்கின்ற வாழ்வுதான் உண்மையான வாழ்வு. உள்ளத்தில் எத்தகைய இயல்பு சிறந்து இருக்கிறதோ அதுவே அவனுடைய குழந்தைகளிடத்திலும் வரும். அதனால் தான் அப்படி வள்ளுவர் பாடினார். தர்மத்துக்குத் துணையாக மனையாட்டியை நினைந்து அவளோடு அறத்தைச் செய்து இடையிடையில் இன்பத்தையும் நுகர்ந்து வாழ்ந்தால் அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் நல்ல குழந்தைகளாகப் பிறக்கும். அப்படியின்றி இன்பத்தை மாத்திரம் எண்ணி வாழ்ந்தால் அவருடைய வாழ்வும் பயனற்றுப் போய், பிற்காலத்துச் சந்ததியும் நல்ல வகையில் அமையாது. 1了五