பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணங்காத் தலை 1 "இரும்பு பிடித்தவன் கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இரா" என்பது பழமொழி. இது மனத்திண்மை அற்றவனுக்கே பொருந்தும். மனத்திலே நடுநிலைமை வழுவாத ஞானிகளோ, கையிலே இரும்பு இருந்தாலும், சிரங்கு இருந்தாலும் கையை அசைக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாள் பிடித்திருக்கும் கை துருதுருப்பது இல்லையா? சிரங்கு பிடித்த கையில் அரிப்பு இருக்காதா? இருக்கும். ஆனால் அவர்கள் மனத்திலே திண்மை மிகுதியாக இருப்பதால் இவ்வுணர்ச்சிகள் செத்துப் போனாற் போல, மரத்துப்போனாற்போல, அடங்கிக் கிடக்கின்றன? ரமணர் செயல் முன்பே ஒரு முறை ரமண மகரிஷிகளைப் பற்றிச் சொல்லி யிருக்கிறேன். வண்டுக் கூட்டத்தின் நடுவிலே அவர் காலை வைக்க அவ்வண்டுகள் காலைக் கடித்தாலும், 'ஏ, காலே, நீ ஏன் வண்டுக் கூட்டத்தைக் கலைத்து அவற்றுக்குத் துன்பத்தை விளை வித்தாய்? அதன் பலனை நீ அடையத்தான் வேண்டும்; படு, படு' என்று சொன்னாராம். வண்டுகளின் கடியை அவர் உடம்பு உணரவில்லை என்று சொல்ல இயலாது. அப்படித் தெரிந்த உணர்ச்சியினாலே அவர் மனம் கலங்கவில்லை. அவர் சரீரத் தோடு வாழும் போதே அதனினின்றும் வேறுபட்டு நின்றார் இது எல்லோருக்கும் முடியுமா என்று கேட்கலாம். கல்லுளி மங்கன் இயல்பு கல்லுளிமங்கன் தன் கையைக் கீறிக் கொள்ளுகிறான். ஒழுகுகின்ற ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே மேலும் கீறிக்