பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குவியாக் கரங்கள் என்று காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறான். மற்றவர்கள் அவனைப் பார்த்துச் சிரிக்கிறார்கள். 'போடா காலால் ஆகாதவனே!' என்றுதானே சொல்ல வேண்டும்? ஆனால், "கையால் ஆகாதவனே!" என்கிறார்கள். "இரவு எத்தனை மணி நேரம் ஆனாலும் சரி, ஒரு புத்தகத்தைப் படித்து முடித்துவிடு கிறேன்' என்று ஒருவன் சொல்கிறான். ஆனால் ஐம்பது பக்கங்கள்கூடப் படிக்காமல் படுத்துவிடுகிறான். அவனைப் பார்த்து, 'கையால் ஆகாதவன்; சொன்னபடி படிக்கவில்லை' என்கிறோமே தவிர, 'கண்ணால் ஆகாதவன் என்று சொல்வது இல்லை. கை எல்லாக் கருமங்களுக்கும் முக்கியமானது ஆகை யால் எல்லா உறுப்புகளுக்கும் பிரதிநிதியாக அதை வைத்துச் சொல்வது வழக்கம். ஏதேனும் ஒரு காரியத்தைச் செய்யும்போது இறைவனை நினைந்து சங்கற்பம் செய்து கொள்வது இந்த நாட்டு வழக்கம். நம்முடைய ஆற்றலை மாத்திரம் நம்பிச் செய்யாமல், இறைவன் திருவருளும் வேண்டும் என்று கருதியே இந்தச் சங்கற்பத்தைச் செய்து கொள்கிறார்கள். அப்படிச் செய்யும்போது இரண்டு கை களையும் சேர்த்துத் தொடையில் வைத்துக் கொண்டு ஆண்டவன் துணையை நாடுகிறோம். நாம் செய்கிற காரியங்களுக்குக் கை உதவும் கருவி; ஆதலால் சங்கற்ப முத்திரையைக் கையால் காட்டுகிறோம். இறைவனை வழிபடும் திறத்திலும் கை முக்கிய மாக இருக்கிறது. கை படைத்த பயன் இறைவனைத் தொழுவது. வணக்க வகை உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஒருவருக்கொருவர் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளச் சில அடையாளங்களைக் காட்டுகிறார்கள். கையை நெற்றியில் வைத்து வணங்கும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது. உள்ளங்கை பூமியைப் பார்க்க மார்பிலே வைத்துக் காட்டுவாரும் உண்டு. நாக்கை நீட்டி மரியாதை செய்வாரும் உண்டு. நம்முடைய நாட்டில் நான்கு வகையில் வணக்கத்தை வெளிப் படுத்துகிறோம். வேகமாகப் போகும்போது கையைக் கூப்பிக் கும்பிடுகிறோம். சிறிதுநேரம் இருந்தால் கையைக் கூப்பும்போதே தலையைச் சிறிது குனிந்து வணங்குகிறோம். சற்றுப் பெரியவர்கள் 197